ஆகஸ்ட் மாத எண்கணிதப் பலன்கள் 
செய்திகள்

ஆகஸ்ட் மாத எண்கணிதப் பலன்கள்!

எப்படி இருக்கப்போகிறது இந்த மாதம்..

ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன்

தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஆகஸ்ட் மாத எண்கணிதப் பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.

1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

எதையும் ஆழமாக யோசித்து திறமையுடன் செய்து முடிக்கும் ஒன்றாம் எண் அன்பர்களே இந்த மாதம் பணவரத்து திருப்திகரமாக இருக்கும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை வெற்றிகரமாக செய்வீர்கள். தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு வேகமாக இல்லாவிட்டாலும் நிதானமாக இருக்கும்.  பணவரத்து வரும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதையும் ஆலோசித்து செய்வது நன்மைதரும். மேல் அதிகாரிகள் கூறுவதற்கு மாற்று கருத்துக்களை கூறாமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு மாற்று கருத்துக்களை மற்றவர்களிடம் கூறாமல் இருப்பது நன்மை தரும். அரசியல்துறையினருக்கு நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேறும். மாணவர்களுக்கு எதையும் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசித்து செய்வது நன்மை தரும்.

பரிகாரம்: சிவனுக்கு பூஜை செய்து விரதம் இருப்பது கஷ்டங்களை போக்கும். மன குழப்பம் நீங்கி தைரியம் உண்டாகும்.

2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

மிடுக்கான நடையும் நேர் கொண்ட பார்வையும் எடுத்த கொள்கையில் மாறாதவர்களுமான இரண்டாம் எண் அன்பர்களே இந்த மாதம் வீண் அலைச்சல் குறையும். சிக்கல்கள் தீரும். எண்ணிய காரியம் கைகூடும் குறிக்கோள் நிறைவேறும். சமூகத்தில் அந்தஸ்து உண்டாகும். தொழில் வியாபாரத்தில் மாற்றம் செய்ய எண்ணுவீர்கள். சிலர் புதிய தொழில் தொடங்க முற்படுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் உண்டாகும். குறிக்கோளை அடைவது லட்சியமாக கொண்டு செயல்படுவீர்கள். புதிய தொடர்புகள் மூலம் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே திடீர் வாக்குவாதங்கள் உண்டாகலாம்.  உஷ்ணம் சம்பந்தமான நோய் உண்டாகலாம். பெண்களுக்கு எண்ணிய காரியம் கை கூடும். கலைத்துறையினருக்கு வீண் அலைச்சல் குறையும். அரசியல்துறையினருக்கு சிக்கலான பிரச்சனைகளில் நல்ல முடிவு கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் மதிப்பெண் பெற எண்ணுங்கள்.

பரிகாரம்: தினமும் காகத்திற்கு சாதம் வைக்க பிரச்சனைகள் குறையும். தடைபட்ட காரியங்களில் தடை நீங்கும்.

3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

வாழ்க்கையில் சந்திக்கும் கஷ்ட நஷ்டங்களை அனுபவமாக எடுத்துக் கொண்டு முன்னேறும் மூன்றாம் எண் அன்பர்களே இந்த மாதம் எதிர்ப்புகள் விலகும். தொல்லைகள் தீரும்.  பணவரத்து தாமதப்படும். வீண் ஆசைகள் உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் வேகம் குறைந்தாலும் திருப்திகரமாக நடக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் கவனமுடன் செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த ஆர்டர்கள், சரக்குகள் வருவதிலும் தாமதம் உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மற்றவர்களின் ஆலோசனையை கேட்டு  செயல்படுவதை  தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும். பெண்களுக்கு வீண் கவலைகள் ஏற்பட்டு நீங்கும். கலைத்துறையினருக்கு  அதிகமாக உழைக்க வேண்டி இருக்கலாம். அரசியல்துறையினருக்கு மேலிடத்துடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் குறையும். மாணவர்களுக்கு எதிலும் நல்லது கெட்டதை யோசித்து அதன் பின்பு அந்த காரியத்தில் ஈடுபடுவது நன்மை தரும்.

பரிகாரம்: பெருமாளை வணங்கி ஏழைகளுக்கு அன்னதானம் வழங்க மனதெளிவு உண்டாகும். அறிவு திறன் அதிகரிக்கும்.

4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

வாழ்க்கையில் முன்னேற எதிர்நீச்சல் போடவும் தயங்காத நான்காம் எண் அன்பர்களே இந்த மாதம் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மனதில் தெளிவு உண்டாகும். ஆக்கபூர்வமாக எதையும் செய்யும் எண்ணம் தோன்றும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. பணம் வரும் வாய்ப்பு உள்ளது. தொழில் வியாபாரம் தொடர்பான கடிதப் போக்குவரத்தால் அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரம் விரிவுபடுத்துவது தொடர்பான திட்டங்கள் தோன்றும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணங்களால் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும். தெளிவான முடிவுகள் மூலம் நன்மை உண்டாகும். பெண்களுக்கு சேமிக்கும் எண்ணம் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் வந்து கொட்டும். அரசியல்துறையினருக்கு நண்பர்கள் மூலமாக அனுகூலம் ஏற்படும். மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கூறுவதை கேட்டு அதன்படி நடப்பதும்,  பாடங்களில் இருக்கும் சந்தேகங்களை உடனுக்குடன் கேட்டு தெரிந்து கொள்வதும் வெற்றிக்கு உதவும்.

பரிகாரம்: நவக்ரஹ ராகுவை வணங்கி வர செல்வம் சேரும். வாழ்க்கை துணையின் ஆதரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு:

விறுவிறுப்பாக எதையும் செய்யும் திறன் படைத்த ஐந்தாம் எண் அன்பர்களே இந்த மாதம் எல்லாவிதத்திலும் நன்மை உண்டாகும். மனோ தைரியம் அதிகரிக்கும். எதையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். அந்நிய நபர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள்  அதிக உழைப்பின் மூலம்  லாபம் கிடைக்க பெறுவார்கள். பொருளாதாரம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் சாதகமாக பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையையும் கூடுதல் உழைப்பின் மூலம் செய்து முடிக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். எதிர்பார்த்த தகவல் நல்ல தகவலாக இருக்கும். பெண்களுக்கு எதிர்ப்புகள் நீங்கும். கலைத்துறையினருக்கு நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அரசியல்துறையினருக்கு  முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். மாணவர்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும்.

பரிகாரம்: பெருமாளை வணங்கி தீபம் ஏற்றி வழிபட்டு வர எதிர்ப்புகள் விலகும். பிரச்சனைகளில் சுமூக முடிவு உண்டாகும். தைரியம் கூடும்.

6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

திறமையையே மூலதமான வைத்து வாழ்வில் முன்னேறும் ஆறாம் எண் அன்பர்களே இந்த மாதம் வாக்கு வன்மையால் எதையும் சாதகமாக செய்து முடிப்பீர்கள். திறமை அதிகரிக்கும். திட்டமிட்டபடி செயலாற்றுவதில் கவனம் செலுத்துவீர்கள். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதுரியமான பேச்சினால் எதிலும் லாபம் காண்பார்கள். வர்த்தக திறமை அதிகரிக்கும். பணவரத்தும் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையால் முன்னேற்றமடைவார்கள். இழுபறியாக இருந்த வேலையை துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். குடும்ப பிரச்சனைகளில் சாதகமான முடிவே உண்டாகும். பெண்களுக்கு துணிச்சலாக எதிலும் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். கலைத்துறையினருக்கு வாகனங்களில் செல்லும்போதும் பயணங்களின் போதும் கவனம் தேவை. அரசியல்துறையினருக்கு பணம் சார்ந்த விஷயங்களில் அதிக கவனம் அவசியம். மாணவர்களுக்கு திறமையால் முன்னேற்றம் உண்டாகும்.

பரிகாரம்: நவக்கிரகத்தில் சுக்கிரனை வணங்க குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். பண கஷ்டம் குறையும்.

7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

எந்த கடினமான விஷயங்களையும் பக்குவமாக எடுத்து சொல்லி எதிரில் இருப்பவர்களை திருப்தியடையச் செய்யும் ஏழாம் எண் அன்பர்களே இந்த மாதம் பல வழிகளிலும் ஏற்பட்ட தொல்லைகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. திடீர் இடமாற்றம் ஏற்பட்டாலும் அதன் மூலம் சாதகம் உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் மெத்தன போக்கு காணப்பட்டாலும் தேவையான பணவரத்து இருக்கும். புதிய முயற்சிகளில் தாமதமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சல் காரியங்களில் இழுபறி என்ற நிலையை காண்பீர்கள். மனதில் குடும்பம் தொடர்பான கவலை, பிள்ளைகள் பற்றிய கவலை இருந்து வரும். பெண்களுக்கு தொல்லைகள் குறையும். வீண் செலவுகள் உண்டாகலாம். கலைத்துறையினர் வாக்கு கொடுக்கும் முன் கவனம் தேவை. அரசியல்துறையினர் படிப்படியான வளர்ச்சியினை காண்பீர்கள். மாணவர்களுக்கு தீவிர கவனத்துடன் பாடங்களை படிப்பது வெற்றிக்கு வழி வகுக்கும்.

பரிகாரம்: ஊனமுற்றவர்களுக்கு தொண்டு செய்வதும் பிரதோஷ காலத்தில் சிவனை வழிபடுவதும் கஷ்டங்களை நீக்கி வீண் விரயத்தை குறைக்கும். காரியத்தடை நீங்கும்.

8, 17, 26  ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

வீரத்தை விட விவேகமே சிறந்தது என்பதை மனதில் கொண்டு எதையும் சாதிக்கும் திறன் உடைய எட்டாம் எண் அன்பர்களே இந்த மாதம் இனிமையான பேச்சின் மூலம் சிக்கலான காரியங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். உங்கள் திறமையை கண்டு அடுத்தவர்கள் வியப்பார்கள். அலைச்சலை தவிர்ப்பதன் மூலம் களைப்பு ஏற்படாமல் தடுத்து கொள்ள முடியும். வேளை தவறி உணவு உண்ணாமல் பார்த்துக்கொள்வது நல்லது. பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதுரியமாக செயல்பட்டு முன்னேற்றம் காண்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவார்கள். பெண்களுக்கு திடீர் என்று கோபம் உண்டாவதை தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்கு திறமையை கண்டு மற்றவர்கள் பாராட்டுவார்கள். அரசியல்துறையினருக்கு எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். மாணவர்களுக்கு நிதானத்தை கடைபிடிப்பது முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும்.

பரிகாரம்: ஆஞ்சனேய கவசத்தை படித்து வருவது மன குழப்பங்கள் நீங்கும். தைரியம் உண்டாகும். தடைபட்ட காரியங்கள்  நன்கு நடந்து முடியும்.

9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாமல் சாமர்த்தியமாக செயல்பட்டு எதிலும் வெற்றி பெறும் ஒன்பதாம் எண் அன்பர்களே இந்த மாதம் மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடக்கலாம். ஆடை, அலங்கார பொருட்கள் வாங்கும் எண்ணம் தோன்றும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் சூழ்நிலை ஏற்படும். பணவரத்து கூடும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். நீண்ட தூர தகவல்கள் நல்ல தகவல்களாக வரும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கப்பெறுவார்கள். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். பெண்களுக்கு நீண்ட தூரத்தில் இருந்து வரும் தகவல்கள் மனதிருப்தியை தருவதாக இருக்கும். கலைத்துறையினருக்கு முயற்சிகளில் சாதகமான பலன் பெறுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு பொருளாதாரம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு திறமையாக எதையும் செய்து பாராட்டு பெறுவீர்கள்.

பரிகாரம்: குரு பகவானுக்கு நெய்தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து அன்னதானம் வழங்க செல்வம் சேரும். செயல்திறன் கூடும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓவல் டெஸ்ட்: யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் விளாசி அசத்தல்!

ஆகஸ்ட்டில் பொதுவிடுமுறை நாள்கள் அதிகம்: விமான கட்டணம் 80% வரை உயர்வு!

ஈரான் அதிபர் பாகிஸ்தான் சுற்றுப்பயணம்

உள்நாட்டு தயாரிப்புகளுக்கே இனி ஒவ்வொரு இந்தியரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்! -மோடி

தேவா யாருன்னு தெரிஞ்சும் விளையாடறானுங்க... கூலி டிரைலர்!

SCROLL FOR NEXT