பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான காஞ்சி ஏகாம்பரநாதர் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
கோயில் நகரம் எனக் கூறப்படும் காஞ்சிபுரத்தில் தொன்மையான திருக்கோயிலும் பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான ஸ்ரீ ஏலவார்குழலி உடனுறை அருள்மிகு ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோயில் மிகுந்த பொருட்செலவில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு புனரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் வரும் டிசம்பர் 8ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது குடமுழுக்கு நாள் நெருங்கும் நிலையில் அனைத்து பணிகளும் தீவிரப் படுத்தப்பட்டு இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
கும்பாபிஷேக விழாவின் முதல் நாளான இன்று காலை 9 மணியளவில் திருக்கோயில் வளாகத்தில் மூலவர் சன்னதி அருகே ஸ்ரீ கணபதி பூஜையுடன் துவங்கி கும்பாபிஷேக யாகசாலை பூஜை பணிகள் துவங்கியது.
இன்று துவங்கிய கணபதி பூஜை மாலை மீண்டும் துவங்கித் தொடர்ந்து 9 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று டிசம்பர் எட்டாம் தேதி காலை 5 மணி முதல் 6 மணி வரை மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.