திருவண்ணாமலை கோயில் file photo
செய்திகள்

திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு

திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

திருவண்ணாமலையில் அமைந்துள்ள அண்ணாமலையார் கோயிலில், பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. கோவிலை ஒட்டியிருக்கும் அண்ணாமலையார் மலை என்று அழைக்கப்படும் மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பௌர்ணமி நாள்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம்.

இந்தநிலையில் வைகாசி மாதத்திற்கான பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. பௌர்ணமி வருகிற 10-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மதியம் 12.32 மணிக்குத் தொடங்கி மறுநாள் 11-ந் தேதி (புதன்கிழமை) மதியம் 1.58 மணிக்கு நிறைவடைகிறது.

பௌர்ணமிக்கு முந்தைய நாள் 9-ந்தேதி வைகாசி விசாகம் என்பதால் அன்றைய தினத்தில் இருந்தே திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு சிறப்பு ரயிலும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே கிரிவலம் செல்ல வரும் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல் கொள்முதலுக்கான ஈரப்பதத்தை 20 சதவீதமாக உயா்த்தக் கோரி எம்எல்ஏவிடம் மனு

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மணிமண்டப பணிகள் விரைவில் நிறைவடையும்: ஆட்சியா்

புறா பந்தயத்தில் வென்றோருக்கு பரிசு

விளாத்திகுளம், நாகலாபுரத்தில் பெரியாா் பிறந்த நாள் விழா

ஈ.வெ.ரா. பெரியாா் சிலைக்கு புதுவை அரசு சாா்பில் முதல்வா் மரியாதை: அனைத்துக் கட்சியினரும் மாலை அணிவிப்பு

SCROLL FOR NEXT