முகப்பு
செய்திகள்

வருமானம் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: வார பலன்கள்!

இந்த வாரம் 12 ராசிக்கும் என்னென்ன பலன்கள் என்று தெரிந்துகொள்ளலாம்...

Updated On : 21 மார்ச், 2025 at 7:30 AM
வார பலன்கள்
பகிர்:

ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (மார்ச் 21 - மார்ச் 27) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

செயல்களில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் கீழ் பணிபுரிவோருக்கு காரியமாற்றுவீர்கள். நாடி வந்தோருக்கு உதவுவீர்கள். புதிய பயிற்சிகளில் ஈடுபடுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் மீதான நம்பிக்கை அலுவலகத்தில் அதிகரிக்கும். வியாபாரிகள் விற்பனையில் சில சூட்சமங்களை அதிகரிப்பீர்கள். விவசாயிகளுக்கு அரசு மானியம் கிடைக்கும்.

அரசியல்வாதிகளுக்கு தன்னம்பிக்கை உயரும். கலைத் துறையினர் நட்பு வட்டாரத்தில் பிரபலமடைவீர்கள். பெண்கள் யோகா கற்பீர்கள். மாணவர்கள் தேர்வில் நிறைய மதிப்பெண்களை

அள்ளுவீர்கள்.

சந்திராஷ்டமம் - மார்ச் 21.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

வருமானம் வரும். புதிய தொழில்நுட்பங்களைக் கற்பீர்கள். சூழ்நிலைக்கேற்ப காரியங்களை முடிப்பீர்கள். நேர்மையுடன் நடப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிலவிய தாமதம் குறையும். வியாபாரிகள் சிறிய முதலீடுகளைச் செய்வீர்கள். விவசாயிகள் ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது நல்லது.

அரசியல்வாதிகள் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். கலைத் துறையினருக்கு அனுகூலமான சூழ்நிலை நிலவும். பெண்களுக்கு குடும்பத்தினரோடு கருத்து வேறுபாடுகள் நீங்கும். மாணவர்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் சாதகமாகும்.

சந்திராஷ்டமம் - மார்ச் 22, 23.

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

நிம்மதி நிறையும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். பெற்றோரின் ஆதரவைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறக்கும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் மௌனம் காப்பது நல்லது. வியாபாரிகள் கூட்டாளிகளுடன் நட்புடன் இருக்கவும். விவசாயிகள் கொள்முதலில் லாபம் கூடும்.

அரசியல்வாதிகள் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். கலைத் துறையினர் முழுத் திறமைகளையும் வெளிப்படுத்துவீர்கள். பெண்களுக்கு புதிய ஆடை, அணிகலன்கள் சேர்க்கை உண்டாகும். மாணவர்கள் வெளிவிளையாட்டுகளில் பயிற்சி செய்வீர்கள்.

சந்திராஷ்டமம் - மார்ச் 24, 25, 26.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

தோற்றத்தில் பொலிவும் நடையில் மிடுக்கும் உண்டாகும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி விடுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் அன்பைப் பெறுவீர்கள். வியாபாரிகள் புதிய யுக்திகளைக் கையாள்வீர்கள். விவசாயிகள் கால்நடைகளில் எதிர்பார்த்த வருவாயைப் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகள் கட்சித் தலைமையிடம் நற்பெயரை எடுக்க முயற்சிப்பீர்கள் கலைத் துறையினர் நலிந்தோருக்கு உதவுவீர்கள். பெண்கள் சற்று கவனத்துடன் இருக்கவும். மாணவர்கள்

படிப்பில் ஒருநிலைத் தன்மையை வைத்துக்கொள்ளுங்கள்.

சந்திராஷ்டமம் - மார்ச் 27.

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

தொழிலில் அதிரடி மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள். கடமையில் கண்ணாய் இருப்பீர்கள். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு மழலைப் பாக்கியம் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்கள் ஆதரவு அளிப்பார்கள். வியாபாரிகள் எதிரிகளை இனம் கண்டு ஒதுக்குவீர்கள். விவசாயிகளின் விளைபொருள்களுக்கு லாபம் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் தொண்டர்களின் நலனில் அக்கறை கொள்வீர்கள் பெண்களுக்கு அநாவசியச் செலவுகள் ஏற்படும். மாணவர்கள் படிப்பில் தீவிர கவனம் செலுத்துவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

ஆச்சரியப்படும் காரியம் நடக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். புதிய முயற்சிகளில் இறங்குவீர்கள். சுறுசுறுப்பும் தன்னம்பிக்கையும் கூடும்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைச் சுமை குறையும். வியாபாரிகள் வியாபாரத்தை நேர்பார்வையிலேயே வைத்துக்கொள்வீர்கள். விவசாயிகளுக்கு லாபம் அடைவீர்கள்.

அரசியல்வாதிகள் விட்டுக் கொடுத்து நடப்பீர்கள். கலைத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்கள் உறவினர்களிடம் அனுசரணையுடன் நடப்பீர்கள். மாணவர்கள் நல்ல நண்பர்களைத் தேர்வு செய்வீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்

தொழிலில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். தோல்வி ஏற்பட்ட காரணத்தைக் கண்டுபிடித்து விலக்கிவிடுவீர்கள். நல்லவர்களின் சகவாசத்தைத் தேடி பெறுவீர்கள். வீடு, நிலங்களில் ஆதாயம் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்கள் மீதான நம்பிக்கை குறையும். வியாபாரிகள் வியாபாரத்தை மேற்கொள்வீர்கள். விவசாயிகளுக்கு அரசு விஷயங்களில் இழுபறிகள் மறையும்.

அரசியல்வாதிகளுக்குத் தன்னம்பிக்கை உயரும். கலைத் துறையினர் எதிர்பார்த்த வருவாயைக் காண்பீர்கள். பெண்களுக்கு உடன்பிறந்தோரால் அனுகூலம் உண்டு. மாணவர்கள் கடினமாகப் படித்து முன்னேறுவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

திறமையும், ஆற்றலும் கூடும். அரசு உதவிகள் கிடைக்கும். கடன்களை அடைத்துவிடுவீர்கள். நவீன உபகரணங்களை வாங்குவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் இருந்த காலதாமதம் குறையும். வியாபாரிகள் புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். விவசாயிகள் பிறருக்கு ஆதரவாக இருப்பார்கள்.

அரசியல்வாதிகள் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். கலைத் துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். பெண்களுக்குக் குடும்பத்தினரிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். மாணவர்கள் எதிர்பார்த்த உதவி சாதகமாக அமையும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

குடும்பத்தினரிடம் கவனம் செலுத்துவீர்கள். சிலருக்கு வெளிநாடு செல்ல வாய்ப்புகள் உண்டாகும். அந்தஸ்தும் கௌரவமும் உயரும்.

உத்தியோகஸ்தர்கள் ரகசியங்களைக் காப்பீர்கள். வியாபாரிகள் கூட்டாளிகளிடம் அன்புடன் இருப்பீர்கள். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த லாபம் உயரும். அரசியல்வாதிகள் புதிய முயற்சிகளைச் செயல்படுத்துவீர்கள்.

கலைத் துறையினர் உடனிருப்போருக்கு உதவுவீர்கள். பெண்களுக்கு ஆடை, அணிகலன்கள் சேர்க்கை நிகழும். மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

பெற்றோரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாவீர்கள். காரியங்கள் வெற்றியுடன் முடிவடையும். உடன் வேலை செய்வோருக்கு ஆதரவாக இருப்பார்கள். குடும்பப் பொறுப்புகள் கூடும்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். வியாபாரிகள் வியாபாரத்தை மேலும் விரிவுபடுத்துவீர்கள். விவசாயிகள் பால் வியாபாரத்தைக் காண்பீர்கள்.

அரசியல்வாதிகள் நற்பெயரை எடுப்பீர்கள். கலைத் துறையினர் உடனிருப்போருக்கு உதவுவீர்கள். பெண்கள் விட்டுக் கொடுத்து நடப்பீர்கள். மாணவர்கள் பிறருக்கு உதவுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

குடும்பத்தில் இருந்து கருத்து வேறுபாடுகள், விரோதங்கள் குறையும். பங்கு வர்த்தகத்தில் லாபம் உயரும். புதிய பொருள்களை விற்பனை செய்வீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் பொறுப்புகள் கூடும். வியாபாரிகள் தங்களின் நேர் பார்வையாலேயே பெருக்குவீர்கள்.

அரசியல்வாதிகள் தொண்டர்களின் நலனில் கவனம் செலுத்துவீர்கள். கலைத் துறையினருக்கு விரும்பிய பயணம் உண்டாகும். பெண்களுக்கு சுப விரயங்கள் ஏற்படலாம். மாணவர்கள் படிப்பில் தீவிர கவனம்

செலுத்துவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

நற்காரியங்களில் ஈடுபடுவீர்கள். அந்தஸ்து உயரும். போட்டியாளர்கள் மீது கண் வைக்கவும். எவரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம்.

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களின் வேலைப் பளுவை குறைத்துவிடுவீர்கள். வியாபாரிகள் வியாபாரத்தைக் கவனத்துடன் நடத்துவீர்கள். விவசாயிகள் கால்நடைகளால் லாபம் அடைவீர்கள்.

அரசியல்வாதிகள் விட்டுக் கொடுத்து நடக்கவும். கலைத் துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். பெண்கள் உறவினர்களிடம் அனுசரணையாக இருப்பீர்கள். மாணவர்கள் நல்லவர்களை நண்பர்களாக்கிக் கொள்வீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

முழு கட்டுரையைப் படிக்க →