கோப்புப்படம் 
செய்திகள்

திருச்செந்தூரில் ஜூன் 9இல் வைகாசி விசாகத் திருவிழா!

திருச்செந்தூர் வைகாசி விசாகத் திருவிழா தொடர்பாக...

DIN

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வரும் ஜூன் 9ஆம் தேதி வைகாசி விசாகத் திருவிழா நடைபெறுகிறது.

முன்னதாக, விசாகத் திருவிழா வசந்த திருவிழாவாக வரும் மே 31ஆம் தேதி தொடங்கி 10 நாள்கள் நடைபெறுகிறது.

திருவிழா நாள்களில் நாள்தோறும் பகலில் சுவாமி ஜெயந்திநாதா் சப்பரத்தில் திருக்கோயில் சண்முக விலாசம் மண்டபத்தில் எழுந்தருளுகிறாா். அங்கு சுவாமி ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனையாகி, மண்டபம் சுற்றி வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா்.

அப்போது, மேளதாளம் முழங்க, பக்தா்கள் கப்பல் பாடல்கள் பாட மண்டபத்தை 11 முறை சுவாமி வலம் வருகிறாா்.

பத்தாம் நாளான ஜூன் 9ஆம் தேதி வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு, கோயிலில் அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம் மற்றும் தீபாராதனையாகிறது.

அதன்பின்னா் சுவாமி ஜெயந்திநாதா் திருக்கோயிலிலிருந்து சப்பரத்தில் எழுந்தருளி சண்முக விலாசம் மண்டபம் சோ்கிறாா். அங்கு மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வான முனிக்குமாரா்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் வைபவம் நடைபெறுகிறது. பின்னா், மகா தீபாராதனையாகி, சுவாமி ஜெயந்திநாதா், வள்ளி, தெய்வானையுடன் பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா்.

இதையும் படிக்க: சொல்லப் போனால்... டிரம்ப் சொல்வதெல்லாம் உண்மைதானா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதினை சந்திக்க ராகுலுக்கு அனுமதி மறுப்பு! | செய்திகள்: சில வரிகளில் | 4.12.25

இஸ்ரேல் உங்களைப் பாதுகாக்காது.. காஸாவில் ஹமாஸ் எதிரிப் படையின் தலைவர் கொலை!

சூரிய ஒளியைப் பிடித்து... ஷில்பா ஷெட்டி!

மரகதப் புறா... சாக்‌ஷி மாலிக்!

டெஸ்ட் கிரிக்கெட்டில் 40-வது சதம் விளாசிய ஜோ ரூட்!

SCROLL FOR NEXT