சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மகரவிளக்கு பூஜையின் சிகர நிகழ்வான மகர ஜோதி தரிசனம் இன்று(ஜன. 14) மாலை 6.40 மணியளவில் பொன்னம்பலமேட்டில் தென்பட்டது. மகர ஜோதியை காண சபரிமலையில் லட்சக்கணக்கில் குவிந்த பக்தா்கள் சரண கோஷம் முழங்க மகர ஜோதியை தரிசனம் செய்து வழிபட்டனர்.
முன்னதாக, ஐயப்பனுக்கு அணிவிப்பதற்காக எடுத்து வரப்படும் திருவாபரணங்கள் பாரம்பரிய வழியில் மாலை 5.30 மணிக்கு வந்தடைந்து, பின்னா் சன்னிதானத்திற்கு மாலை 6.20 மணிக்கு திருவாபரணங்கள் கொண்டு வரப்பட்டது. ஐயப்ப சுவாமிக்கு திருவாபரணங்கள் சாற்றப்பட்டு தீபாராதனை காட்டப்பட்ட பின் பொன்னம்பலமேட்டில் மகர ஜோதி தென்பட்டது.
மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.