திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மூடப்பட்ட கோயில் 10 மணி நேரத்திற்குப் பின் மீண்டும் திறப்பு
திருப்பதி : திருமலை ஏழுமலையான் கோயிலில் சந்திர கிரகணத்தையொட்டி மூடப்பட்ட கோயில், சுமார் 10 மணி நேரத்திற்குப்பின் மீண்டும் திறக்கப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
திருப்பதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கோயில்கள் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 3) சந்திர கிரகணம் காரணமாக மூடப்பட்டன. பிற்பகல் 3.20 மணி முதல் மாலை 6.47 மணி வரை சந்திர கிரகணம் ஏற்பட்டது. வைகானச ஆகம விதிப்படி கிரகண நேரத்திற்கு 6 மணி நேரம் முன்பு கோயில் கதவுகள் மூடப்படுவது வழக்கம். அதன்படி காலை 9 மணிக்கு தேவஸ்தான கோயில்களின் கதவுகள் மூடப்பட்டன.
கிரகணம் முடிந்து சுத்தி செய்யப்பட்டு, மீண்டும் இரவு 8.30 மணியளவில் திருமலை ஏழுமலையான் கோயிலில் நடை திறக்கப்பட்டது. அதன்பின், பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
Advertisement
Advertisement