முகப்பு
செய்திகள்

வீரமகா காளியம்மன் கோயிலில் காளி திருநடனம்!

வீரமகா காளியம்மன் கோயிலில் 57-ஆம் ஆண்டு காளி திருநடனம் பற்றி..

Updated On : 24 மார்ச், 2026 at 8:31 AM
காளி திருநடனம்
பகிர்:

பிரசித்தி பெற்ற வீரமகா காளியம்மன் கோயிலில் 57-ஆம் ஆண்டு காளி திருநடனம் நடைபெற்றது. வீதிகளில் ஆடி வந்த காளியை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வங்காரம்பேட்டையில் வீரமகா காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு 57-ஆம் ஆண்டு காளி திருநடன திருவிழா மற்றும் படுகளம் பார்த்தல் நிகழ்ச்சி இன்று விமர்சையாக நடைபெற்றது.

கடந்த வியாழக்கிழமை காப்புக் கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. விழாவினை முன்னிட்டு கரகம், காவடி பால்குடம் எடுத்தல், அதனைத் தொடர்ந்து ஸ்ரீ துர்க்கை அம்மன் எல்லை வலம் வருதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, வீரமகா காளியம்மன் படுகளம் பார்த்தல் நிகழ்ச்சி கோவில் அருகில் உள்ள மைதானத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அம்மன் வீதியுலாவும் நடைபெற்றது. இதில் பாபநாசம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

summary

The 57th annual Kali Sacred Dance was held at the renowned Veeramaha Kaliamman Temple.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.