முகப்பு
கோயில்கள்

சோமநாதர் அமிர்த மகோத்வம்: பிரதமர் மோடி சிறப்பு பூஜை!

சோமநாதர் கோயிலில் 75-வது ஆண்டு அமிர்த மகோத்சவம் பற்றி..

சோமநாதர் கோயிலில் பிரதமர் மோடி - ANI
பகிர்:

குஜராத்தில் உள்ள சோமநாதர் கோயிலில் 75-வது ஆண்டு அமிர்த மகோத்சவத்தின் சிறப்புப் பூஜையில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.

12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றான குஜராத் சோமநாதர் கோயிலின் 75-வது ஆண்டு மகோத்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. சோமநாதர் கோயிலின் சிறப்புப் பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்றார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கும்பாபிஷேகம் மற்றும் த்வஜாரோஹண சடங்குகள், பிரதிஷ்டை சடங்கு மற்றும் கோயில் கொடியேற்றம் ஆகியவற்றில் பிரதமர் பங்கேற்றார்.

அமிர்த மகோத்வசக் கொண்டாட்டங்களின்போது விமானப்படையின் சூர்ய கிரண் விமான சாகசக் குழுவின் வான்வழி சாகச நிகழ்ச்சியையும் பிரதமர் மோடி பார்வையிட்டார்.

Advertisement

சோமநாத் ஆலய வளாகத்திற்குள் நுழைவதற்கு முன்பு, சோமநாத் நகரில் நடைபெற்ற சாலைப் பயணத்தின் போது, ​​கிர் சோமநாத் பகுதியில் அமைந்துள்ள சர்தார் வல்லபாய் படேலின் சிலைக்குப் பிரதமர் அஞ்சலி செலுத்தினார்.

சோமநாதர் ஆலயத்திற்குச் செல்லும் வழியிலும் சாலைப் பயணத்தை மேற்கொண்டபோது, இதில் ஏராளமான ஆதரவாளர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பளித்தனர். நகரின் முக்கியப் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில்,

புனரமைக்கப்பட்ட சோமநாதர் கோயிலின் பிரதிஷ்டையின் 75-வது ஆண்டு விழாவில் சோமநாதரின் புனிதத் தலத்திற்கு வருவது தெய்வீக அனுபவத்தைத் தந்தது. இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் அனுபவித்த தருணத்தை இன்று மீண்டும் பெற்றுள்ளேன். சோமநாதர் அமிர்த மகோத்சவத்தின் பக்திமயமான சூழல் அசாரண ஆற்றலைப் பரப்புகிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

summary

Prime Minister Narendra Modi on Monday participated in the Vishesh Maha Puja organised as part of the 'Somnath Amrit Mahotsav' celebrations at the Somnath Temple in Gujarat.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.