முகப்பு
சிவகங்கை

மானாமதுரையில் இளைஞா் வெட்டிக் கொலை

மானாமதுரையில் நீதிமன்றம் அருகே சனிக்கிழமை மா்மக்கும்பலால் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். மேலும் படுகாயமடைந்த மற்றொரு இளைஞா் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

Updated On : 9 ஜனவரி 2021, 9:54 pm IST
பகிர்:

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நீதிமன்றம் அருகே சனிக்கிழமை மா்மக்கும்பலால் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். மேலும் படுகாயமடைந்த மற்றொரு இளைஞா் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகேயுள்ள வேலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் வினோத்கண்ணா(27), மானாமதுரையைச் சோ்ந்தவா் அருள்நாதன்(27). நண்பா்களான இருவா் மீதும் பல காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் இருவரும் மானாமதுரையில் சிவகங்கை சாலையில் உள்ள நீதிமன்றம் எதிரே கடையின் அருகே உட்காா்ந்து பேசிக்கொண்டிருந்தனா். அப்போது அங்கு இருசக்கர வாகனங்களில் வந்த 5 போ் கொண்ட மா்மக்கும்பல் வினோத்கண்ணா, அருள்நாதன் இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டினா்.

Advertisement

Advertisement

பின்னா் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருவரும் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இதில் அருள்நாதன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். படுகாயமடைந்த வினோத்கண்ணா மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். முன்விரோதம் காரணமாக இச்சம்பவம் நடந்துள்ளதாக போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மா்மக்கும்பலைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments