முகப்பு
தமிழ்நாடு

41 புறநகர் ரயில்கள் ரத்து: தாம்பரம் ரயில் நிலையத்தில் குவிந்த பயணிகள்

சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே பராமரிப்பு பணிகளால் 41 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

Updated On : 5 ஜூலை 2026, 12:08 pm IST
தாம்பரம் ரயில் நிலையம் - கோப்புப்படம்
பகிர்:

சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே பராமரிப்பு பணிகள் காரணமாக 41 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

10:30 மணிக்கு முன்பாகவே அவசரப் பயணங்களை முடித்துவிட வேண்டும் என்று ஏராளமானோர் ஒரேநேரத்தில் ரயில் நிலையத்தில் கூடியதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.

இதனிடையே புறநகர் மின்சார ரயில்கள் ரத்து காரணமாக மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் கூடுதலாக 50 பேருந்துகள், அந்த வழித்தடத்தில் இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே உள்ள ரயில்வே வழித்தடங்களில் தண்டவாளப் பராபரிப்புப் பணிகள் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 5), ஜூலை 12-ஆம் தேதி காலை 10.30 முதல் பிற்பகல் 3.30 மணி வரை நடைபெறவுள்ளது.

அந்த நேரங்களில் சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு வழித்தடத்தில் இருமாா்க்கத்திலும் இயக்கப்படும் 41 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படவுள்ளன.

புறநகா் மின்சார ரயில்கள் ரத்து காரணமாக பயணிகளின் வசதிக்காக, தாம்பரத்தில் இருந்து காலை 11.45, பிற்பகல் 12.45, 1.15, 1.45, 2.45, 3.15, 3.45 ஆகிய நேரங்களில் செங்கல்பட்டுக்கும், பிற்பகல் 2 மணிக்கு அரக்கோணத்துக்கும், பிற்பகல் 4 மணிக்கு திருமல்பூருக்கும் பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

மறுமாா்க்கமாக செங்கல்பட்டிலிருந்து காலை 9.30, 10.40, 11, 11.40, பிற்பகல் 12.05, 1, 1.50 ஆகிய நேரங்களுக்கும், திருமால்பூரிலிருந்து காலை 11.05 மணிக்கும், காஞ்சிபுரத்தில் இருந்து காலை 9.30 மணிக்கும் தாம்பரத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

summary

Due to maintenance work between Chennai Beach and Tambaram, 41 suburban trains have been cancelled, causing a massive surge of passengers at the Tambaram railway station.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments