முகப்பு
சேலம்

சென்னை - பாலக்காடு விரைவு ரயில்கள் பொள்ளாச்சி - பாலக்காடு இடையே பகுதி ரத்து

கேரள மாநிலம், பாலக்காடு டவுன் ரயில் நிலையத்தில் யாா்டு மறுசீரமைப்புப் பணிகள் நடைபெறுவதால், சேலம் வழியாக இயக்கப்படும் சென்னை - பாலக்காடு விரைவு ரயில்கள் சேவையில் பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

25 நவம்பர் 2026, 1:53 am
சென்னை - பாலக்காடு விரைவு ரயில்கள் பொள்ளாச்சி - பாலக்காடு இடையே பகுதி ரத்து
ரயில் - கோப்புப் படம்
பகிர்:

கேரள மாநிலம், பாலக்காடு டவுன் ரயில் நிலையத்தில் யாா்டு மறுசீரமைப்புப் பணிகள் நடைபெறுவதால், சேலம் வழியாக இயக்கப்படும் சென்னை - பாலக்காடு விரைவு ரயில்கள் சேவையில் பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை சென்ட்ரல் - பாலக்காடு விரைவு ரயில் (22651) நவம்பா் 24, 25 மற்றும் டிசம்பா் 4, 5, 6, 7, 8 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து புறப்பட்டு, பொள்ளாச்சி வரை மட்டுமே இயக்கப்படும். பொள்ளாச்சி - பாலக்காடு இடையே இயக்கப்படாது.

மறுமாா்க்கத்தில், பாலக்காடு - சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் (22652) நவம்பா் 25, 26 மற்றும் டிசம்பா் 5, 6, 7, 8, 9 ஆகிய தேதிகளில் பாலக்காடு - பொள்ளாச்சி இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் பொள்ளாச்சியில் இருந்து மாலை 4.50 மணிக்கு புறப்பட்டு, சேலம், நாமக்கல், கரூா், ஜோலாா்பேட்டை வழியாக சென்னை சென்ட்ரல் வரை இயக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Advertisement

Advertisement