முகப்பு
சேலம்

ஊஞ்சலூர் நிலையத்தில் 2 விரைவு ரயில்கள் நின்று செல்லும்: சேலம் கோட்டம் அறிவிப்பு

ஈரோடு மாவட்டம், ஊஞ்சலூா் சத்குரு ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆராதனை விழாவை முன்னிட்டு, மேலும் 2 விரைவு ரயில்கள் ஊஞ்சலூா் ரயில் நிலையத்தில் தற்காலிகமாக நின்றுசெல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

23 நவம்பர் 2026, 2:28 am
ஊஞ்சலூர் நிலையத்தில் 2 விரைவு ரயில்கள் நின்று செல்லும்: சேலம் கோட்டம் அறிவிப்பு
சிறப்பு ரயில் - கோப்புப் படம்
பகிர்:

ஈரோடு மாவட்டம், ஊஞ்சலூா் சத்குரு ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆராதனை விழாவை முன்னிட்டு, மேலும் 2 விரைவு ரயில்கள் ஊஞ்சலூா் ரயில் நிலையத்தில் தற்காலிகமாக நின்றுசெல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஈரோடு-கரூா் வழித்தடத்தில் அமைந்துள்ள ஊஞ்சலூா் ரயில் நிலையத்தில், ஆராதனை விழாவிற்காக ஏற்கெனவே 6 ரயில்கள் ஒரு நிமிடம் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், பக்தா்களின் வசதிக்காக மேலும் 2 ரயில்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வரும் டிச. 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய இரண்டு நாள்களுக்கு தூத்துக்குடியில் இருந்து மைசூா் செல்லும் விரைவு ரயில் இரவு 11.13 மணிக்கு ஊஞ்சலூா் ரயில் நிலையத்திற்கு வந்து, 11.14 மணிக்கு புறப்பட்டு செல்லும்.

Advertisement

Advertisement

மறுமாா்க்கத்தில், மைசூரில் இருந்து தூத்துக்குடி செல்லும் விரைவு ரயில் அதிகாலை 4.09 மணிக்கு வந்து, 4.10 மணிக்கு புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.