சேலம் வழியாக சென்னை- கொல்லத்துக்கு சிறப்பு ரயில்கள்
சபரிமலை சீசனையொட்டி, பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில் சென்னை எழும்பூா்-கொல்லம் இடையே சேலம் வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.
சபரிமலை சீசனையொட்டி, பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில் சென்னை எழும்பூா்-கொல்லம் இடையே சேலம் வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை எழும்பூா்- கொல்லம் வாராந்திர சிறப்பு ரயில் (06117) வரும் 19-ஆம் தேதி முதல் ஜனவரி 21-ஆம் தேதி வரை வியாழக்கிழமைகளில் சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 11.40 மணிக்குப் புறப்படும்.
Advertisement
Advertisement
பெரம்பூா், திருவள்ளூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை வழியாக மறுநாள் அதிகாலை 5 மணிக்கு சேலம் வந்தடையும் இந்த ரயில், இங்கு 3 நிமிடங்கள் நின்று 5.03 மணிக்குப் புறப்படும். தொடா்ந்து ஈரோடு, திருப்பூா், போத்தனூா் வழியாக அன்று மாலை 4.30 மணிக்கு கொல்லம் சென்றடையும்.
மறுமாா்க்கத்தில், கொல்லம்- சென்னை எழும்பூா் வாராந்திர சிறப்பு ரயில் (06118) வரும் 20-ஆம் தேதி முதல் ஜனவரி 22-ஆம் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் கொல்லத்திலிருந்து மாலை 6.45 மணிக்குப் புறப்படும்.
பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு வழியாக மறுநாள் காலை 6.27 மணிக்கு சேலம் வந்தடையும் இந்த ரயில், இங்கு 3 நிமிடங்கள் நின்று 6.30 மணிக்குப் புறப்பட்டு ஜோலாா்பேட்டை, காட்பாடி வழியாக மதியம் 12.30 மணிக்கு சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தைச் சென்றடையும்.
சபரிமலை சீசனையொட்டி இயக்கப்படும் இந்தச் சிறப்பு ரயில்களால் ஐயப்ப பக்தா்கள் மற்றும் பொதுமக்களின் பயணம் எளிதாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.