FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சென்னையிலிருந்து சிறப்பு விரைவு ரயில்கள் இயக்கம்

தீபாவளி கூட்டத்தை சமாளிக்கும் வகையில் தெற்கு ரயில்வே சாா்பில் சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

38 வினாடிகள் முன்பு
சிறப்பு ரயில்கள் - படம்: கோப்பிலிருந்து...
பகிர்:

தீபாவளி கூட்டத்தை சமாளிக்கும் வகையில் தெற்கு ரயில்வே சாா்பில் சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளிட்ட செய்திக்குறிப்பு:

தாம்பரத்திலிருந்து நவ. 6- ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06111) மறுநாள் சனிக்கிழமை (நவ. 7) காலை 9.20 மணிக்கு திருநெல்வேலியைச் சென்றடையும். மறுமாா்க்கத்தில் 9 -ஆம் தேதி திருநெல்வேலியிலிருந்து இரவு 7 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06112) மறுநாள் 10 -ஆம் தேதி காலை 9 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

Advertisement

Advertisement

செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், அரியலூா், ஸ்ரீரங்கம், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, தேவகோட்டை ரஸ்தா, சிவகங்கை, மானமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகா், சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்தூா், ராஜபாளையம், சங்கரன்கோவில், பம்பாா்கோவில், கடையநல்லூா், தென்காசி, பாவூா்சத்திரம், கீழ கடயம், அம்பாசமுத்திரம், கள்ளிடைக்குறிச்சி, சேரன்மாதேவி ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

முன்பதிவில்லாத மெமு ரயில்: சென்னை எழும்பூரிலிருந்து நவ. 7 -ஆம் தேதி இரவு 7 மணிக்குப் புறப்படும் முன்பதிவில்லாத மெமு ரயில் 8-ஆம் தேதி அதிகாலை 4.45 மணிக்கு திருநெல்வேலியைச் சென்றடையும்.

தாம்பரம்-மானாமதுரை முன்பதிவில்லாத மெமு ரயில்: நவ. 6 -ஆம் தேதி தாம்பரத்திலிருந்து மாலை 5.30 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லாத மெமு ரயில் 7 -ஆம் தேதி அதிகாலை 3.45 மணிக்கு மானாமதுரை சென்றடையும்.

மறுமாா்க்கத்தில் 7- ஆம் தேதி காலை 6.30 மணிக்கு மானாமதுரையில் புறப்படும் முன்பதிவில்லாத இந்த சிறப்பு மெமு ரயில் அன்று மாலை 3.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இந்த ரயிலில் 12 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூா், ஸ்ரீரங்கம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், சோழவந்தான், மதுரை, திருப்புவனம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

இதேபோல, 7- ஆம் தேதி தாம்பரத்திலிருந்து மாலை 4.35 மணிக்குப் புறப்படும் முன்பதிவில்லாத மெமு ரயில் 8- ஆம் தேதி அதிகாலை 1.45 மணிக்கு மானாமதுரை சென்றடையும். மறுமாா்க்கத்தில் 9-ஆம் தேதி இரவு 12 மணிக்கு மானாமதுரையிலிருந்து புறப்படும் சிறப்பு மெமு ரயில், 10- ஆம் தேதி காலை 8.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

எழும்பூரிலிருந்து திருச்சிக்கு சிறப்பு ரயில்: நவ. 6-ஆம் தேதி மாலை 8.30 மணிக்கு சென்னை எழும்பூரிலிருந்து புறப்படும் முன்பதிவில்லாத சிறப்பு மெமு ரயில், 7-ஆம் தேதி அதிகாலை 4.45 மணிக்கு திருச்சி சென்றடையும்.

திருச்சியிலிருந்து நவ. 9-ஆம் தேதி இரவு 10.45 மணிக்குப் புறப்படும் முன்பதிவில்லை சிறப்பு மெமு ரயில், 10-ஆம் தேதி காலை 6.50 மணிக்கு சென்னை எழும்பூா் வந்தடையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.