FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தாம்பரத்திலிருந்து திருச்சி, மானாமதுரைக்கு இன்று முன்பதிவில்லா சிறப்பு மெமு ரயில்

சென்னை தாம்பரத்திலிருந்து திருச்சி, மதுரை வழியாக சிவகங்கை மாவட்டம் மானாமதுரைக்கு வெள்ளிக்கிழமை மாலை முன்பதிவில்லாத சிறப்பு மெமு ரயில் குறித்து....

16 அக்டோபர் 2026, 9:59 am IST
தாம்பரத்திலிருந்து திருச்சி, மானாமதுரைக்கு இன்று முன்பதிவில்லா சிறப்பு மெமு ரயில் - கோப்புப்படம்
பகிர்:

சென்னை: சென்னை தாம்பரத்திலிருந்து திருச்சி, மதுரை வழியாக சிவகங்கை மாவட்டம் மானாமதுரைக்கு வெள்ளிக்கிழமை மாலை முன்பதிவில்லாத சிறப்பு மெமு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஆயுத பூஜையை முன்னிட்டு, சென்னை தாம்பரத்திலிருந்து 16-ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு 12 முன்பதிவில்லா பெட்டிகளுடன் புறப்படும் சிறப்பு மெமு ரயில் சனிக்கிழமை (அக்.17) அதிகாலை 3 மணிக்கு மானாமதுரையை சென்றடையும்.

Advertisement

Advertisement

மறுமாா்க்கத்தில் மானாமதுரையிலிருந்து சனிக்கிழமை (அக்.17) காலை 10.45 மணிக்குப் புறப்படும் முன்பதிவில்லாத மெமு ரயில் அன்று இரவு 8.30 மணிக்கு தாம்பரம் நிலையத்தை வந்தடையும்.

இந்த ரயில்கள் செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூா், ஸ்ரீரங்கம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், சோழவந்தான், மதுரை, திருப்புவனம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

சென்னை தாம்பரத்திலிருந்து சனிக்கிழமை (அக்.17) இரவு 11.35 மணிக்குப் புறப்படும் முன்பதிவில்லாத சிறப்பு மெமு ரயில் ஞாயிற்றுக்கிழமை (அக்.18) பிற்பகல் 11 மணிக்கு மானாமதுரையை சென்றடையும்.

மறுமாா்க்கத்தில் மானாமதுரையிலிருந்து நாளை(அக்.17) காலை 10.45, அக்.20-ஆம் தேதி புறப்படும் முன்பதிவில்லாத மெமு சிறப்பு ரயில் அன்று இரவு 11.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும். மதுரை, திண்டுக்கல், திருச்சி வழியாக இந்த ரயில் இயக்கப்படும்.

சென்னை எழும்பூரிலிருந்து வெள்ளிக்கிழமை (அக்.16) இரவு 9 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லாத மெமு சிறப்பு ரயில் சனிக்கிழமை (அக்.17) அதிகாலை 4.05 மணிக்கு திருச்சியை சென்றடையும்.

மறுமாா்க்கத்தில் சனிக்கிழமை (அக்.17) ஆம் தேதி அதிகாலை 5.50 மணிக்குப் புறப்படும் மெமு சிறப்பு ரயில், அன்று பிற்பகல் 11.45 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூரில் இருந்து இன்றும், நாளையும்( அக்.16, 17) இரவு 7 மணிக்கு திருச்சிக்கு முன்பதிவில்லா ரயில் இயக்கப்படவுள்ளது

சென்னை எழும்பூர்-திருச்சி மெமு சிறப்பு ரயில் பண்ருட்டி, சீர்காழி, கும்பகோணம், தஞ்சாவூர் வழியே இயக்கப்படுகிறது.

Unreserved special MEMU train from Tambaram to Trichy and Manamadurai today

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments