தீபாவளிக்கு டிக்கெட் முன்பதிவு செய்யவில்லையா? மேலும் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!
தீபாவளிக்கு மேலும் இரு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது குறித்து...
தீபாவளி கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காக நவம்பர் 5 ஆம் தேதி எழும்பூர் - கன்னியாகுமரி, நவம்பர் 7 ஆம் தேதி தாம்பரம் - தென்காசி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி சிறப்பு ரயில்
Advertisement
Advertisement
சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி இடையே இயக்கப்படும் ஒருவழி சிறப்பு விரைவு ரயில் (06151), சென்னை எழும்பூரில் இருந்து நவ. 5 ஆம் தேதி இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 3.15 மணிக்கு கன்னியாகுமரியை சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி - எழும்பூர் சிறப்பு ரயில்
அதேபோல, நவ. 9 ஆம் தேதி இரவு 11:20 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் ஒருவழி சிறப்பு ரயில் (06152), மறுநாள் நண்பகல் 12 மணிக்கு எழும்பூரை வந்தடையும்.
தாம்பரம் – தென்காசி சிறப்பு ரயில்
தாம்பரம் - தென்காசி இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் (06049), தாம்பரத்தில் இருந்து நவ. 7 ஆம் தேதி காலை 5 மணிக்கு புறப்பட்டு, அதே நாளில் மாலை 4.45 மணிக்கு தென்காசியை சென்றடையும்.
செங்கோட்டை – தாம்பரம் சிறப்பு ரயில்
எதிர்வழித்தடத்தில், செங்கோட்டை – தாம்பரம் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் (06050), செங்கோட்டையில் இருந்து நவ. 9 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.20 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.
இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை (நவ. 3) காலை 8 மணிக்குத் தொடங்கும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
To ease the rush during the Diwali festival, special trains will be operated between Egmore and Kanyakumari on November 5, and between Tambaram and Tenkasi on November 7.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.