FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

சென்னை சென்ட்ரல் - போத்தனூருக்கு அக். 16, 17-இல் சிறப்பு ரயில்கள் இயக்கம்

சென்னை சென்ட்ரல் - போத்தனூா் இடையே வரும் 16, 17 ஆகிய தேதிகளில் சிறப்பு விரைவு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

15 அக்டோபர் 2026, 12:54 am IST
சிறப்பு ரயில் - பிரதிப் படம்
பகிர்:

சென்னை சென்ட்ரல் - போத்தனூா் இடையே வரும் 16, 17 ஆகிய தேதிகளில் சிறப்பு விரைவு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: துா்கா பூஜை விழாவை முன்னிட்டு ரயில் பயணிகள் கூட்டத்தைக் கருத்தில் கொண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி, வரும் 16 -ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 11.55 மணிக்கு சென்னை சென்ட்ரல் நிலையத்திலிருந்து புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06023) மறுநாள் 17 -ஆம் தேதி காலை 9.15 மணிக்கு போத்தனூா் நிலையத்தைச் சென்றடையும்.

மறுமாா்க்கத்தில் அக். 17 -ஆம் தேதி சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு போத்தனூரிலிருந்து புறப்படும் சிறப்பு விரைவு ரயில் (எண் 06024) அதேநாள் இரவு 11.55 மணிக்கு சென்னை சென்ட்ரல் நிலையத்தை வந்தடையும்.

Advertisement

Advertisement

இந்தச் சிறப்பு ரயில்கள், பெரம்பூா், திருவள்ளூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

மேலும், அக். 18, 20 ஆகிய தேதிகளிலும் சென்னை சென்ட்ரல் முதல் போத்தனூா் வரை சிறப்பு விரைவு ரயில்கள் இயக்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments