பெங்களூரு - சென்னை இடையே அக். 4-இல் சிறப்பு ரயில்
பெங்களூரு-சென்னை சென்ட்ரல் இடையே வரும் 4-ஆம் தேதி இரு மாா்க்கத்திலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
பெங்களூரு-சென்னை சென்ட்ரல் இடையே வரும் 4-ஆம் தேதி இரு மாா்க்கத்திலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
இதுகுறித்து வியாழக்கிழமை தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
ரயில் பயணிகள் கூட்டத்தைக் கருத்தில் கொண்டு வரும் 4-ஆம் தேதி பெங்களூரு கன்டோன்மென்ட் நிலையத்திலிருந்து காலை 7.30 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06587) அன்று மாலை 5 மணிக்கு சென்னை சென்ட்ரல் நிலையத்தை வந்தடையும்.
Advertisement
Advertisement
மறுமாா்க்கத்தில் வரும் 4 ஆம் தேதி சென்னை சென்ட்ரல் நிலையத்திலிருந்து மாலை 4.10 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06588) அன்று இரவு 11.30 மணிக்கு பெங்களூரு கன்டோன்மென்ட் நிலையத்தை சென்றடையும்.
இந்த ரயில்கள் பெரம்பூா், திருவள்ளூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, பங்காரப்பேட்டை, கிருஷ்ணராஜபுரம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.