தீபாவளி பண்டிகை: கன்னியாகுமரி, தென்காசிக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
தீபாவளி பண்டிகையையொட்டி, பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டிருப்பது பற்றி...
தீபாவளி பண்டிகையையொட்டி, பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்துத் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை எழும்பூரில் இருந்து நவம்பர் 5-ஆம் தேதி இரவு 11.50 மணிக்குச் சிறப்பு விரைவு ரயில் புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 3.15 மணிக்குக் கன்னியாகுமரியைச் சென்றடையும்.
அதேபோல், கன்னியாகுமரியில் இருந்து நவம்பர் 9-ஆம் தேதி இரவு 11.20 மணிக்கு விரைவு ரயில் புறப்பட்டு, மறுநாள் நண்பகல் 12 மணிக்குச் சென்னை எழும்பூரை வந்தடையும்.
Advertisement
Advertisement
மேலும், தாம்பரம் - தென்காசி சிறப்பு ரயில், நவம்பர் 7-ஆம் தேதி காலை 5 மணிக்குத் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, அதே நாளில் மாலை 4.45 மணிக்குத் தென்காசியைச் சென்றடையும்.
இதன் மறுமார்க்கமாக, செங்கோட்டையில் இருந்து, நவம்பர் 9-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்குச் சிறப்பு ரயில் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.20 மணிக்குத் தாம்பரத்தை வந்தடையும். இந்தச் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை (நவம்பர் 3-ஆம் தேதி) காலை 8 மணிக்குத் தொடங்கும் எனத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
Southern Railway has announced that special trains will be operated to reduce passenger congestion during the Deepavali festival.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.