அருணாச்சலம் ஸ்டூடியோவில் ஒரு தெலுங்கு படப்பிடிப்பில் அக்கனேரி நாகேஸ்வர ராவை சந்தித்து, 'நீங்கள் அரசியலில்சேரவில்லையா? என்று கேட்ட பொழுது அவர் சொன்னார்.
"நான் எப்போதுமே என்னுடைய சக்தியை சரியாக உணர்ந்திருக்கிறேன். வசதிகளிருந்தும் என்னுடைய வேலைக்காரன் சாப்பிடுகிற அளவு கூட என்னால சாப்பிட முடிவதில்லை. ஆணடவன் அந்த அளவுக்குத்தான் இப்போது சக்தியை தந்திருக்கிறான்.
ராமாராவ்காரு அரசியலுக்கு போவதால் என்னையும் இப்படிக் கேட்கிறீர்கள். அரசியலுக்கு போவதில் தவறில்லை. ஏனென்றால் யாரவது போய் நிஜமாகவே ஜனங்களுக்கு நல்லது செய்ய மாட்டாங்களா என்கிற நிலைமை இப்போது. அந்த அளவுக்கு நாட்டில் கரப்ஷன் பயங்கரமாக தாண்டவமாடிக் கொண்டிருக்கிறது. யாரை நம்புவது என்றே ஜனங்களுக்கு தெரியவில்லை. அதனால் சிலர் அங்கு போய் ஏதாவது அங்கு 'நல்லது' செய்ய முயற்சிப்பதில்லை தவறில்லை.
ஆனால் ராமாராவ்காரு அரசியலுக்கு போவதால் அவருக்குதான் நஷ்டம். அது மட்டுமல்ல சினிமா இண்டஸ்ட்டரிக்கும் பயங்கர நஷ்டம். சினிமாவில் அவர் நடிக்கும் படங்களில் பல லட்சம் முதலீடு செய்யப்பட்டு ஆயிரக்கணக்கான குடும்பங்கள் அவரை நம்பி உள்ளன" என்று சொன்னார் நாகேஸ்வரராவ். .
சந்திப்பு: ராம்ஜி
(சினிமா எக்ஸ்பிரஸ் 15.06.82 இதழ்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.