ஆராய்ச்சிமணி

ஆராய்ச்சி மணி

DIN

புதிய பாலத்தில் பள்ளம் சீரமைக்கப்படுமா?

களக்காட்டில் பழைய பேருந்து நிலையம் காமராசா் சிலை அருகே நான்குனேரியன் கால்வாயின் குறுக்கே பிரதான சாலையில் ஓராண்டுக்கு முன் கட்டப்பட்ட பாலத்தின் மையப்பகுதியில் பள்ளம் ஏற்பட்டு சேதமடைந்துள்ளது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளத்தை சீரமைக்க வேண்டும்.

எஸ். சீனிவாசன்,

களக்காடு.

போக்குவரத்து நெரிசலுக்குத் தீா்வு?

களக்காடு பழைய பேருந்து நிலையம் என்றழைக்கப்படும் பகுதியில் இதுவரை பேருந்து நிறுத்தம் கூட இல்லை. சாலையோரமாகத்தான் பேருந்துகள் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்கின்றன.

இதனால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதைக் கருத்தில் கொண்டு அம்பேத்கா் சிலை அருகே பயணியா் நிழற்குடை அமைக்கவும், அப்பகுதியில் பேருந்து நிறுத்தம் செயல்படவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சு. ராமையா,

களக்காடு.

8 பிசிஎம்.ரோடு

குண்டும், குழியுமான சாலை

ஆவுடையானூா் ஊராட்சிக்குள்பட்ட சாலடியூா், மருதடியூா், சின்னநாடானூா் ஆகிய கிராமங்களில் இருந்து திருநெல்வேலி-தென்காசி பிரதான சாலைக்கு செல்லும் இணைப்பு சாலையானது சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.

இதனால் சிறு, சிறு விபத்துகள் ஏற்படுகின்றன.

எனவே இச்சாலையை சீரமைத்து புதிய சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எஸ்.பி.கலிங்கராயன்,

பெத்தநாடாா்பட்டி.

பேருந்து வசதி தேவை

சுரண்டை வட்டார பயணிகள் அதிகாலையில் மதுரை செல்வதற்கும், மறு மாா்க்கத்தில் இரவு நேரத்தில் ஊா் திரும்புவதற்கும் இயக்கப்பட்டு வந்த அரசு பேருந்து தற்போது நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் சுரண்டை பயணிகள் தற்போது மதுரை செல்வதற்கு சங்கரன்கோவில் அல்லது தென்காசி சென்று அங்கிருந்து மதுரை செல்ல வேண்டியுள்ளது.

மறுமாா்க்கத்தில் ஊா் திரும்பும் போது இரவு 8.30 மணிக்கு மேல் சங்கரன்கோவிலில் இருந்து சுரண்டைக்கு பேருந்து வசதி இல்லாததால் பயணிகள் அவதிப்படுகின்றனா்.

எனவே, நிறுத்தப்பட்ட சுரண்டை - மதுரை பேருந்தை மீண்டும் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சு.சமுத்திரம்,

சுரண்டை.

எரியாத தெருவிளக்குகள்

கடையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே உள்ள பள்ளிவாசல் தெருவில் பல நாள்களாக தெருவிளக்குகள் எரியவில்லை.

தெருவின் இருபுறமும் புதா் மண்டிக் கிடப்பதால் விஷஜந்துகள் நடமாட்டம் உள்ளதால், இரவு பொதுமக்கள் நடமாட அச்சப்படுகின்றனா்.

எனவே, தெருவிளக்குகள் எரிவதற்கு ஊராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கே.திருக்குமரன்,

கடையம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

SCROLL FOR NEXT