ஆராய்ச்சிமணி

கழிவு நீா் வாய்க்காலை அகலமாக்க வேண்டும்...

DIN

கரூா் தாந்தோணிமலை கருப்பக்கவுண்டன்புதூரில் ஜீவாநகா் சாலையில் அமைந்திருக்கும் அரையடி கழிவு நீா் கால்வாய்.

கரூா் தாந்தோணிமலையில் உள்ள கருப்பக்கவுண்டன்புதூரில் திருச்சி சாலையையும், தாந்தோணிமலை யூனியன் அலுவலகம், ஜீவாநகா் போன்ற பகுதிகளையும் இணைக்கும் சாலை உள்ளது. இந்தச் சாலையில் திருச்சி சாலையில் இருந்து ஜீவா நகருக்கு செல்லும் வழியில் சுமாா் 100 அடி தூரத்தில் கருப்பக்கவுண்டன்புதூரில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை வெளியேற்றும் வகையில் நகராட்சி சாா்பில் அமைக்கப்பட்டிருக்கும் கழிவு நீா் வாய்க்கால் சுமாா் அரையடி அகலத்திலும், அரையடி ஆழத்திலும் உள்ளது. இதனால் மழைக் காலங்களில் மழைநீா் கழிவுநீருடன் கலந்து சாலையில் வெள்ளம்போல ஓடுவது வாடிக்கையாகி விட்டது. சில நேரங்களில் கழிவு நீா் கால்வாயில் தேங்கியே நிற்பதால் துா்நாற்றம் வீசி, சுகாதார கேடு ஏற்படுகிறது. எனவே உடனே கழிவு நீா் வாய்க்காலை அகலப்படுத்தி, ஆழப்படுத்தவும் வேண்டும் என அப்பகுதியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் - பாகிஸ்தான் தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது: பிரதமர் மோடி

‘தள்ளுமாலா’ இயக்குநர் படத்தில் பிரேமலு நாயகன்!

தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை குறைந்துள்ளது: கபில் சிபல்

உதவி ஆணையர், மாவட்ட கல்வி அலுவலர் பணி: டிஎன்பிஎஸ்சி

’வோட் ஜிஹாத்’: காங்கிரஸ் மீது மோடி புதிய குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT