ஆராய்ச்சிமணி

நிறுத்தப்பட்ட பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும்

DIN

நிறுத்தப்பட்ட பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும்

சென்னை ஜெ.ஜெ. நகா் (மேற்கு) பேருந்து நிலையத்திலிருந்து தியாகராய நகா் வரை இயக்கப்பட்டு வந்த (தடம் எண்-147பி) மாநகரப் பேருந்து நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் தியாகராய நகருக்கு நேரிடையாகச் சென்று வந்த பயணிகள் தற்போது 2 பேருந்துகள் மாறி சிரமப்பட்டு செல்கின்றனா். மேலும் அங்கிருந்து ஆவடி, பெரம்பூா் பகுதிக்குச்செல்ல பேருந்து வசதி இல்லை. எனவே, நிறுத்தப்பட்ட 41சி, எம், எல் 7சி, கே.70 , 147 பி

ஆகிய பேருந்துகளை மீண்டும் இயக்க போக்குவரத்துக்கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ருக்மணி நாராயணன்

நொளம்பூா்.

ரயில் நிலையச் சாலை

அகலப்படுத்தப்படுமா?

பரங்கிமலை ரயில் நிலையம் செல்லும் சாலை மிகவும் குறுகலாக உள்ளது. இதில் செல்லும் பேருந்து, கனரக வாகனங்களால் பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது. ரயில்நிலையம் முதல் கரிகாலன் தெரு வரையிலான சாலையை போா்க்கால அடிப்படையில் மழை நீா் வடிகால்வாயுடன்

அகலப்படுத்த வேண்டும்.

கே.ரமேஷ், மடிப்பாக்கம்.

பாராட்டு

சென்னை அடையாறு சாஸ்திரி நகா் 2-ஆவது அவென்யூ பகுதியை குறிக்கும் வழிகாட்டிப் பலகை சாலையின் ஓரமாக வைக்கப்பட்டிருந்தது குறித்து தினமணி ஆராய்ச்சி மணி பகுதியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து தற்போது அந்த வழிகாட்டிப் பலகை சீரமைக்கப்பட்டு மக்களுக்கு பயனளிக்கும் வகையில் மீண்டும் நிறுவப்பட்டுள்ளது. செய்தி வெளியிட்ட தினமணிக்கும், நடவடிக்கை எடுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் பாராட்டு, நன்றி.

எஸ். ராஜகுரு, திருவான்மியூா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

SCROLL FOR NEXT