தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 560

ஹரி கிருஷ்ணன்

இறைவனுடைய திருவடியைச் சேர்ந்து வாழும் வாழ்வைக் கோரும் இப்பாடல் மதுரைக்கானது. 

அடிக்கு ஒற்றொழித்து 25 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்கள் நெடிலோடு தொடங்கும் நான்கெழுத்துகளைக் கொண்டவை; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்கள் இரண்டு குற்றெழுத்துகளையும், கணக்கில் சேராத இரண்டாம் எழுத்து வல்லொற்றாகவும் அமையப்பெற்றவை. 

தானதன தத்த தானதன தத்த
      தானதன தத்த                      தனதான

ஆனைமுக வற்கு நேரிளைய பத்த
         ஆறுமுக வித்த                  கமரேசா
      ஆதியர னுக்கும் வேதமுதல் வற்கும்
         ஆரணமு ரைத்த                 குருநாதா
தானவர்கு லத்தை வாள்கொடுது ணித்த
         சால்சதுர்மி குத்த                திறல்வீரா
      தாளிணைக ளுற்று மேவியப தத்தில்
         வாழ்வொடுசி றக்க               அருள்வாயே
வானெழுபு விக்கு மாலுமய னுக்கும்
         யாவரொரு வர்க்கு               மறியாத
      மாமதுரை சொக்கர் மாதுமைக ளிக்க
         மாமயில்ந டத்து                 முருகோனே
தேனெழுபு னத்தில் மான்விழிகு றத்தி
         சேரமரு வுற்ற                   திரள்தோளா
      தேவர்கள்க ருத்தில் மேவியப யத்தை
         வேல்கொடுத ணித்த             பெருமாளே.

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகபட்ச வாக்குப்பதிவு செய்ய வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

SCROLL FOR NEXT