தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 656

ஹரி கிருஷ்ணன்


திருவடிக்குத் தொண்டாற்றக் கோரும் இத் திருப்புகழ் திருப்பரங்குன்றத்துக்கானது. 

அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும் இரண்டு (கணக்கில் சேராத) வல்லொற்றுகளும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும் இரண்டு (கணக்கில் சேராத) மெல்லொற்றுகளும் அமைந்துள்ளன.

தனத்தத் தந்தனந் தனத்தத் தந்தனந்
                தனத்தத் தந்தனந் தனதான

தடக்கைப் பங்கயங் கொடைக்குக் கொண்டல்தண்
               டமிழ்க்குத் தஞ்சமென் றுலகோரைத்

தவித்துச் சென்றிரந் துளத்திற் புண்படுந்
               தளர்ச்சிப் பம்பரந் தனையூசற்

கடத்தைத் துன்பமண்  சடத்தைத் துஞ்சிடுங்
              கலத்தைப் பஞ்சஇந் த்ரியவாழ்வைக்  

கணத்திற் சென்றிடந் திருத்தித் தண்டையங்
              கழற்குத் தொண்டுகொண் டருள்வாயே 

படைக்கப் பங்கயன் துடைக்கச் சங்கரன்
             புரக்கக் கஞ்சைமன் பணியாகப்

பணித்துத் தம்பயந் தணித்துச் சந்ததம்
            பரத்தைக் கொண்டிடுந் தனிவேலா 

குடத்தைத் தென்பரங் பொருப்பிற் றங்குமங்
           குலத்திற் கங்கைதன் சிறியோனே 

குறிப்பொற் கொம்பைமுன் புனத்திற் செங்கரங்
           குவித்துக் கும்பிடும் பெருமாளே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

ஆவடி இரட்டைக் கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்ஃபோன் யாருடையது? தீவிர விசாரணை

பாலியல் தொல்லை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு

SCROLL FOR NEXT