இந்த நாளில்...

06.01.1966: புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பிறந்த தினம் இன்று!

DIN

அல்லா இரக்கா இரகுமான் என்னும் ஏ .ஆர்.ரகுமான் புகழ் பெற்ற இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். பிரபல தமிழ்த்திரைப்பட இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் 1992-ஆம் ஆண்டு வெளிவந்த  'ரோஜா' திரைப்படத்தின் மூலம் தமிழ்த்திரை உலகில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

அதன் பின்னர் இன்று வரை பல இந்தி, தமிழ், ஆங்கிலம் மற்றும் பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் ரசிகர்களால் அன்புடன் 'இசைப்புயல்' என அழைக்கப்படுகிறார்.

ஹாலிவுட் திரைப்படமான ஸ்லம் டாக் மில்லியனியர் என்ற ஆங்கிலத் திரைப்படத்திற்கு இசையமைத்தமைக்காக ஆஸ்கார் விருதுகளை வென்றிருக்கிறார். மேலும் இத்திரைப்பட இசைக்காக இவருக்கு 2008 ஆம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருதும் , பாஃப்டா விருதும் கிடைத்தன. இவ்விரு விருதுகளைப் பெற்ற முதலாவது இந்தியரும் இவரேயாவார்.

இவருக்கு 2010-ஆம் ஆண்டில் இந்திய அரசின் பத்ம பூசண் விருது அளிக்கப்பட்டது. இவர் மெட்ராஸின் மொசார்ட் என்றும் செல்லமாக அழைக்கப்படுகிறார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT