கவிதைமணி

மழை நீர் போல: -ஏ.வி.ராமநாதன்

கவிதைமணி

குழந்தையின் சிரிப்பு,
ஆட்டம் பாட்டம்,  
வெகுளித் தன்மை,
திறந்த  மனம்
தூய்மையான 
மழை நீர்போல... 

அது வளர வளர
வளர்ப்போரின் 
எண்ணங்கள்,சொற்கள்
சேரச்சேர,
சுற்றுப்புறத்  தாக்கம் 
கூடக்கூட, 
அனுபவங்களின் 
தோல்வியும், கசப்பும் 
கலக்கக்கலக்க,
மனிதன் 
உயிரிகள் நிறைந்த 
ஆற்று நீராகி, 
உப்புக்கள் நிறைந்த 
குட்டை நீராகி.....

மனிதன் 
அசுத்தங்களை நீங்கி, 
வெப்பத்தில் ஆவியாகி, 
மீண்டும் மேகமாகி,
தூய்மையான
குழந்தை போன்ற   
மழை நீராக,

தேவை
அனுபவங்கள், 
திறந்த மனம், 
கற்றல், 
பாடங்கள்,
திருந்துதல், 
தெளிவடைதல்!

மழைநீர் சுழற்சி போல, 
மனிதர் வாழ்வு 
சுழலும் போலும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் இருக்கும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT