கவிதைமணி

நீதியைத்  தேடி:  கவிஞர்  இரா  .இரவி !

கவிதைமணி

தன் சதையை  அறுத்து நீதி வழங்கிய 
தன்னிகரில்லா வரலாறு இங்கு உண்டு !

தன் மகனை தேர் ஏற்றிக் கொன்று நீதிக்கு 
தலை வணங்கிய வரலாறு இங்கு உண்டு !

தவறான தீர்ப்பு வழங்கிய மன்னன் 
தன் உயிர் நீத்த வரலாறு இங்கு உண்டு !

பட்டப்பகலில் விளக்குடன் மனிதனைத் தேடிய 
புகழ் பெற்ற பாடல் பலரும் கேட்டதுண்டு !

உச்ச நீதி மன்றத்தில் நீதியைத் தேடி 
உலகம் அலையும் அவலம் நேர்ந்தது !

நடிகரின்   வழக்கு என்றால் விரைவாக 
நீதி வழங்கிய வரலாறு நடந்தது உண்டு !

பெரும் பணக்காரர்கள் என்றால் உடன் 
பெரும்பாடு பட்டு தீர்ப்பு வழங்கியது  உண்டு !

பொங்கலுக்குள் வழங்க வேண்டிய தீர்ப்பு 
பொங்கலுக்குள் வழங்க முடியாது என்றனர் !

பொறுத்து போதும் என்று இன்று 
பொங்கி எழுந்து விட்டனர் மாணவர்கள் !

தாமதமான நீதியும் அநீதிதான் என்பது 
தாமாதமாகப் புரிந்தது நீதிபதிகளுக்கு !

சிறு நெருப்பை பெரும் தீயாக்கி விட்டனர் 
சிந்தையில் போராட்ட குணத்தை வளர்த்தனர் ! 

நீதியின் பிறப்பிடமான தமிழ்மண் மக்கள் 
நீதியைத் தேடி அலையும் அவலம் நேர்ந்தது !

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

70வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய இபிஎஸ்... விஜய், அண்ணாமலை வாழ்த்து!

தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை பெய்துள்ளது?

ஆம் ஆத்மி எம்எல்ஏக்களுடன் அரவிந்த் கேஜரிவால் ஆலோசனை!

அன்னையர் நாள்: தலைவர்கள் வாழ்த்து!

உலக செவிலியர் நாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

SCROLL FOR NEXT