கவிதைமணி

கல்லறைப் பூவின் கண்ணீர்த் துளி: அழகூர். அருண். ஞானசேகரன்

கவிதைமணி
மணம்மிக்க  பூவொன்று  மலர்ந்திட்டது  அன்று          மகிழ்ந்திட்டது  இறைபாதம்  அடைந்திடுவோம்  என்று !கனத்ததொரு  இதயமுடன்  அழுதிட்டது  இன்று,          கழுதையதன் கல்லறைமேல்  அமரந்தோமே  என்று!நல்லமண  மலராகப்  பிறந்ததனை  எண்ணி          நாளெல்லாம்  மகிழ்ந்ததது ;  மாலையென்று  ஆகிகல்லறைக்கு  வந்ததனால்  கவலைகள்  இலையாம்,          கபோதியை  அலங்கரிக்க  நேர்ந்ததனால்  தானாம்!மங்கலநற்  பெண்களதன்  கூந்தல்தனில்  அமர்ந்து          மணம்வீசி  மகிழ்வடைய  வரந்தன்னைக்  கேட்டும்,இங்குவொரு  கொள்ளைக்காரி  கல்லறையில் அமர          என்னபாபம்  செய்ததது,  ஏனிந்தக்  கொடுமை?வாசங்கொண்ட  மலராகப்  பிறந்ததனை  எண்ணி          வக்கணையாய்  மகிழ்ததென்ன,  எனினும்  முடிவில்நேசமிலாக்  கொடியோரின்  கல்லறையைக்  காண          நேர்ந்ததனை  எண்ணியது வருந்துகின்ற தென்ன!கோடிகோடி  என்றாகக்  கொள்ளைதனை  இட்ட           கொடியவரின்  கல்லறை  வாசமது  வேண்டாம்,நாடிதனில்  ஏழ்மையுற்று  இறப்புதனைக்  கண்ட           நல்லோரின்  கல்லறையே  போதுமெனும்  எதுவும்!மீண்டும்வோர்  பிறப்புண்டு  என்றாலும்  மலர்கள்           மேன்மையது  கொண்டவரை  அடைந்திடவே  எண்ணும்;மாண்பற்றோர்  கல்லறையில் அமர்ந்திட  நேர்ந்தால்            மகிழ்ச்சிதனைக்  கொள்ளாதே  எந்தவொரு  மலரும்!                   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புஷ்பா 2 படத்தின் முதல் பாடல்!

20 இடங்களில் சதமடித்த வெயில்! உஷ்ணத்தின் உச்சத்தால் தவிக்கும் தமிழகம்

அதி வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் மீண்டும் காயம்!

‘கூல்’ கண்ணம்மா!

கலவர பூமியான கலிபோர்னியா பல்கலைக்கழகம்! பாலஸ்தீன - இஸ்ரேல் ஆதரவாளர்களிடையே மோதல்

SCROLL FOR NEXT