கவிதைமணி

வீர மங்கை: -உத்ரன்,

கவிதைமணி

இங்கு...
ஒவ்வொரு மனைவியும்...
வீர மங்கை தான்!

குடிகாரக் கணவன்...
கூத்தாடிக் கிழவன்...
மன சாட்சியை விற்ற மதி கெட்டவர்கள்...
திருட்டையே தொழிலாக க் கொண்டவர்கள்...
பொய்யிலேயே புரட்சி செய்பவர்கள்...
மெய்யையே அறியாதவர்கள்...

தன் பலஹீனத்தால் மனைவியைச் சந்தேகிப்பவர்கள்...
'தானே எல்லாம்!' எனும் தருக்கர்கள்...
அடுத்தவர் பெண்டாட்டியை ஆராதிப்பவர்கள்...
பிறருக்கு மட்டுமே செலவு செய்பவர்கள்...
மறந்தும் கஜானாவைத் திறவாதவர்கள்...
மற்றவர்கள் உணர்வினையே மதிக்காதவர்கள்...
பாசத்தையும் பகிராதவர்கள்...

படாடோபமே வாழ்வென்பவர்கள்...
கொலை செய்யவும் அஞ்சாதவர்கள்...
கூடி வாழ்வதையே வெறுப்பவர்கள்...
அழகை ஆராதிக்காதவர்கள்...
உண்மை உழைப்பையும் புகழாதவர்கள்...
ஊர் முழுதாலுமே தூற்றப் படுபவர்கள்...
-இப்படி ஒன்றாகவும் பலவாகவும் உள்ள...
ஆண் வர்க்கத்தையே ஆயுள் முழுதும் சகித்துக் கொள்ளும்...
ஒவ்வொரு இல்லாளும் ...
இவ்வுலகின் வீர மங்கை என்றால்...
வியப்பென்ன அதில்?!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

SCROLL FOR NEXT