கவிதைமணி

மேகத்தில் கரைந்த நிலா: கவிஞர் கே. அசோகன்

கவிதைமணி

மேகப் பயணத்தில் கரைந் த்தே நிலா – அதன்
மௌனமே ஓர்நாளில் இல்லை உலா
தாகத்தால் குடிநீர் தேடி குடித்தாயோ  ? – காதல்
தாபத்தை தணிக்க  தூதுக்கு துடித்தாயோ?

உன்னைக் காட்டி ஊட்டிட்டாள் சோறு – இன்று
ஒளியலைபேசி காட்டியேதான் சோறு
தென்றல் வீசும் கடற்கரையின் ஓரம் – ஜோடி
கிளிகளின் காதல்மொழி சிருங்காரம்!

மதியென்றே உன்னை சொல்கின்றார் – நீயோ
மதியினை மயக்கியே கொல்கின்றாய்!
மதிமயக்கும் உன்னழகில் மயங்கி தான் - மேக
மன்னனவன் அணைப்பினில் கிறங்கி னாயோ?

உன்னிடத்தில் குடியேக வருகின்றார்- மனிதர்
உன்னெழிலை பறிக்கவே விரைகின்றார்
என்சேதி இதுவென்றே சொல்லு கின்றேன்- நீ
இன்முகத்தில் ஒளியேற்றி கொல் கின்றாயே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

SCROLL FOR NEXT