கவிதைமணி

நதிக்கரையின் நினைவலைகள்: சசி எழில்மணி

கவிதைமணி

ஓரிடம் பிறந்து
பலஇடம் தவழ்ந்து
செல்லும் இடங்களில்
உழவை வளர்த்து
வளத்தை கொடுத்து
கடலில் கலக்கும்
பொன் நதியே

இயற்கையின் நியதியை
நிலைபெறச் செய்து
வாழும் உயிர்களை
என்றும் அரவணைத்து
நாகரீகத்தை நயமாய்த் தந்து
பொங்கிவரும் புதுநதியே

எங்கெங்கோ அடைபட்டு
தடைபட்டு நிற்பதேனோ?
சோலை நிலங்கள் எல்லாம்
பாலையாய் பிளவுபட்டு
கண்களை நீராக்குவதுமேனோ?

நிழலாடும் நினைவுகளில்
மலராட வேண்டாமோ
மலராத மரங்களெல்லாம்
பூத்துக் குலுங்க வேண்டாமோ?

தடைகளைத் தாண்டி
உன் வழி ஓடி
வளம்பெருக்க வருவாயோ?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மகள்!

பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது பாஜக: நீட்டா டிசோசா

குஜராத் சமூக ஆர்வலர் கொலை: பாஜக முன்னாள் எம்.பி. விடுதலை!

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

SCROLL FOR NEXT