கவிதைமணி

நதிக்கரையின் நினைவலைகள்: பாலா கார்த்திகேயன்

கவிதைமணி

கரை புரண்டோடிய நதியே
காண்பதற்கு இனிய காட்சியே
காணாமல் ஏங்கும்  மனம்
கண்ணீரில் தவிக்கிறோமே

பச்சைப்பசேல் நிறத்தில் 
பசுங்கிளிகள் பறந்தோடும்
பச்சைப்புல்வெளிகள்
வறண்டு கிடக்கும் மாயமென்ன

மங்கையவர் நீராடி 
மகிழ்ந்த காலம் 
சின்னஞ்சிறு குழந்தைகள்
சிறகடித்து நீரை ரசித்த காலம்
வராதோ....
வாழ்வே சின்னபின்னமாகிப்
போனதோ...

உழவர் உவகை கொண்டு
உற்சாகமாக உழுது மகிழ்ச்சி
கண்ட பொழுதுகள்...நதியே
உன் வரவின்றி கானலானதோ

கண்ணீர் துடைக்க நதியே  வா
கழனியெல்லாம் செழிக்க வா
கண்கள் பூரிக்க காதலனுடன் வா
கவிதையாக வா நதியே.....

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“நான்_முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

SCROLL FOR NEXT