கவிதைமணி

புத்தாண்டு சபதம்!

கவிதைமணி

வாரம் மாதம் வருடமென 
வாழ்வில் காலம் பறந்தோடும்!
நேரம் கடந்து போவதன்முன் 
நீயுன் சாதனை நிகழ்த்திவிடு!

காலம் கனியும் என்றெண்ணிக் 
கடமை மறந்து நீயிருந்தால்
ஞாலம் உன்னை மறந்துவிடும்!
நாள்கள் உன்னை  முந்திவிடும்!

கணங்கள் பறக்கும் வேகத்தில்
காய்ந்த சருகாய் ஆகும் முன் 
சுணக்கம் ஏதும் கொள்ளாமல்
சுறுசுறுப்பாகச் செயலாற்று!

நேற்றை மறந்து இன்றே நீ 
நாளை உலகைப் படைத்துவிடு!
காற்றை விஞ்சும் வேகத்தில்
காலம் தன்னை வென்றுவிடு!

புவியின் சுழலும் வேகத்தைப் 
புதிய ஆண்டில் முந்திவிடு!
குவியும் உந்தன் சிந்தனையால்
குவலயத்தை வென்றுவிடு!

உதயம் ஆகும் புத்தாண்டில்
உலகை வெல்லப் புறப்படுக!
நிதமும் வென்று சாதிக்க
நீயும் சபதம் ஏற்றிடுக!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT