இனிப்பு வகைகள்

பழ அப்பம்

வேணுகோபால்


 தேவையான பொருள்கள்:

 கோதுமை மாவு - அரை கிண்ணம்
 அரிசி மாவு - 2 கிண்ணம்
 நன்கு பழுத்த பூவன் பழம் - 2 ( துண்டுகளாக்கி மிக்ஸியில் அடிக்கவும்)
 வெல்லம் - 2 கிண்ணம்
 தேங்காய் - 1 மேசைக்கரண்டி (பொடியாக நறுக்கி நெய்யில் வறுக்கவும்)
 நெய் - அரை கிண்ணம்
 ஏலக்காய்த் தூள் - கால் தேக்கரண்டி
 ஆப்ப சோடா - 1 சிட்டிகை
 எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.
 உப்பு - 1 சிட்டிகை

செய்முறை:

மாவு வகைகளை ஒன்றாகக் கலந்து கொள்ளவும். வெல்லத்தில் அரை டம்ளர் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கரைந்ததும் வடிகட்டி மாவுடன் சேர்க்கவும்.

பிறகு தேங்காய், பழ விழுது, ஏலக்காய்த்தூள், ஆப்பசோடா, உப்பு அனைத்தையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர்விட்டு இட்லி மாவு பதத்திற்கு கரைக்கவும்.

பின்னர், குழிப்பணியாரக் கல்லில் நெய் ஊற்றி, மாவை சிறிது சிறிதாக எடுத்து ஊற்றி சிறு தீயில் நன்கு வேகவிட்டு, பின்னர் மறுபுறம் திருப்பிவிட்டு வெந்ததும் எடுத்து சூடாகப் பரிமாறவும். பழ அப்பம் தயார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT