இனிப்பு வகைகள்

ராகி குழிப் பணியாரம்

நா.நாச்சாள்

தேவையானவை:
புழுங்கல் அரிசி - 1 கிண்ணம்
வரகு அரிசி - 1 கிண்ணம்
ராகி மாவு - 1 கிண்ணம்
உளுந்து -  1 கிண்ணம்
வெந்தயம் - அரை தேக்கரண்டி
வெல்லம் - 2 கிண்ணம்
ஏலக்காய் - 5
தேங்காய் எண்ணெய் - தேவைக்கேற்ப
உப்பு - 1  தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 5
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - 2 ஈர்க்கு

செய்முறை: புழுங்கல் அரிசி, வரகு அரிசி, உளுந்து, வெந்தயம் நான்கையும் ஊற வைத்து, அரைத்து, ராகி மாவை அதனுடன் கலந்து சுமார் ஆறு மணி நேரம் புளிக்க வைக்கவும்.

மாவு நன்கு புளித்ததும் வெல்லம், ஏலக்காய் சேர்த்து நன்கு கலக்கவும். அடுப்பில் குழிப்பணியார சட்டியை வைத்து சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடேறியதும் மாவினை சிறு சிறு குழிகளில் ஊற்றவும்.  ஒரு பக்கம் நன்கு வெந்ததும் மறு பக்கம் திருப்பி வேகவிடவும். கார ராகி குழிப்பணியாரம் செய்ய, மாவுடன் வெல்லத்திற்கு பதில் உப்பு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து ஊற்றவும்.

இந்த ராகி குழிப்பணியாரம் செய்ய காலையிலேயே அரிசி ஊற வைத்து, மதியம் எடுத்து அரைத்து வைத்தால் மாலையில் புளித்த பின்பு பணியாரம் சுட சரியாக
இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT