சைவ வகைகள்

கொள்ளு ரசம்

ஹேமலதா

தேவையான பொருள்கள்:

கொள்ளு வேக வைத்த தண்ணீர் - 1கிண்ணம்
புளி கரைசல் - 1 கிண்ணம்
தண்ணீர் - 1 டம்ளர்
தக்காளி - 2
பெருங்காயம் - அரை தேக்கரண்டி
தாளிக்க :
கடுகு - 1 தேக்கரண்டி
மிளகு, சீரகம் - 2 தேக்கரண்டி
பூண்டு - 10 பல்
மிளகாய் வற்றல் - 3
உப்பு - தேவைக்கேற்ப
கொத்துமல்லித்தழை - சிறிது

செய்முறை:  

ஒரு பாத்திரத்தில் தக்காளியைப் போட்டு மசித்துக் கொள்ளவும். அத்துடன் புளி கரைசலை சேர்த்துக் கலக்கிக் கொள்ளவும்.

பின்னர், வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு தாளித்து, அதனுடன் பொடித்த மிளகு, சீரகம், பூண்டு, மிளகாய் வற்றல் தாளிக்கவும்.

பின்னர், புளி கரைசல், கொள்ளு தண்ணீர் மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்து கிளறி, அதனுடன் பெருங்காயத்தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும். ரசம் சூடேறி கொதி வரும் நிலைக்கு வந்தவுடன்,  நறுக்கிய கொத்துமல்லித் தழைத் தூவி இறக்கிவிடவும்.

( குறிப்பு: ரசம் நன்கு கொதித்தால் கசந்துவிடும். அதனால் கொதி நிலைக்கு வந்ததும் இறக்கிவிட வேண்டும்). ஆரோக்கியமான கொள்ளு ரசம் தயார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயந்திரக் கோளாறு - 167 பேருடன் திருச்சியில் தரையிறங்கிய விமானம்

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

சிம்பு - 48 படப்பிடிப்பு எப்போது?

திமிரும் தன்னடக்கமும்...!

வார இறுதி நாட்கள் - மெட்ரோ அறிவித்த சூப்பர் ஆஃபர்

SCROLL FOR NEXT