நாள்தோறும் நம்மாழ்வார்

முதற்பத்து மூன்றாம் திருவாய்மொழி - 4

செ.குளோரியான்

யாரும் ஓர் நிலைமையன் என அறிவுஅரிய எம்பெருமான்,
யாரும் ஓர் நிலைமையன் என அறிவுஎளிய எம்பெருமான்,
பேரும் ஓர் ஆயிரம், பிற பல உடைய எம்பெருமான்,
பேரும் ஓர் உருவமும் உளது இல்லை, அலது இல்லை பிணக்கே.

எப்பேர்ப்பட்ட ஞானிகளானாலும் சரி, இவன் இப்படிப்பட்டவன் என அறிந்துகொள்ள இயலாதவன் எம்பெருமான்,

அதேசமயம், எளிய பக்தர்கள் அவனை வணங்கினால் அவனது தன்மையை அறியலாம், அவனும் அவர்களுக்கு எளியவனாகி அருள்செய்வான்,

ஆயிரம் திருப்பெயர்களையும் திருமேனிகளையும் கொண்ட எம்பெருமானுக்குப் பெயருண்டு, உருவம் உண்டு என்பவர்கள் சிலர், பெயரில்லை, உருவமில்லை என்பவர்கள் சிலர், இந்த விவாதம் என்றைக்கும் தொடரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT