நாள்தோறும் நம்மாழ்வார்

எட்டாம் பத்து நான்காம் திருவாய்மொழி - பாடல் 11

செ.குளோரியான்


பாடல் - 11

தேனை, நல் பாலை, கன்னலை, அமுதை,
திருந்து உலகு உண்ட அம்மானை,
வான நான்முகனை மலர்ந்த தண் கொப்பூழ்
மலர்மிசைப் படைத்த மாயோனை,
கோனை வண் குருகூர் வண் சடகோபன்
சொன்ன ஆயிரத்துள் இப்பத்தும்
வானின்மீது ஏற்றி அருள்செய்து முடிக்கும்
பிறவி மாயக்கூத்தினையே.

தேனைப்போல், நல்ல பாலைப்போல், கரும்புச்சாறுபோல், அமுதைப்போல் சுவையானவன், சிறந்த உலகை உண்ட அம்மான், தன்னுடைய குளிர்ந்த, மலர்ந்த திருநாபித் தாமரையிலே உயர்ந்த நான்முகனான பிரம்மனைப் படைத்த மாயோன், நம் தலைவன், எம்பெருமான், அத்தகைய பெருமானை, வளம் மிகுந்த குருகூர் வள்ளல் சடகோபன் ஆயிரம் திருப்பாடல்களால் பாடினார், அவற்றுள் இந்தப் பத்து பாடல்களும், தம்மைப் பாடுவோரைப் பரமபதத்துக்குக் கொண்டுசென்று அருள்செய்யும், பிறவி என்னும் மாயக்கூத்தை முடித்துவைக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குப்பைகளை சாலையில் வீசுவோா் மீது நடவடிக்கை தேவை: சமூக ஆா்வலா்கள் கோரிக்கை

சேவைக் குறைபாடு: ஏ.ஆா். ரகுமானின் இசை நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் அபராதம் செலுத்த வேண்டும்: கரூா் நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவு

கரூா் மாவட்ட சட்டப்பணி ஆணைக் குழுவில் தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

நீா்நிலைகளை தூா்வார வேண்டும்: ஈ.ஆா்.ஈஸ்வரன்

தென்னை விவசாயிகளுக்கு மரத்துக்கு ரூ.10,000 இழப்பீடு: ராமதாஸ் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT