நூல் அரங்கம்

அகமும் புறமும் (புதுப்புனலிலிருந்து)

அகமும் புறமும் (புதுப்புனலிலிருந்து) - கோவை ஞானி; பக்.128; ரூ.100; புதுப்புனல், பாத்திமா டவர், முதல் மாடி, 117, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, சென்னை-5.

கோவை ஞானி

அகமும் புறமும் (புதுப்புனலிலிருந்து) - கோவை ஞானி; பக்.128; ரூ.100; புதுப்புனல், பாத்திமா டவர், முதல் மாடி, 117, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, சென்னை-5.

"புதுப்புனல்' இதழில் நூலாசிரியர் கோவை ஞானி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.

"அணுமின் நிலையங்களில் உற்பத்தி செய்யும் மின் உற்பத்தியைக் கொண்டுதான் மாபெரும் தொழில் நிறுவனங்களை ஏற்படுத்த முடியும் என்பதும் ஒரு பொய்க் கனவு. அணுசக்தி நிலையங்கள் என்பவை இறுதியில் அணுகுண்டு உற்பத்திக்கான யுரேனியத்தைக் கழிவுப் பொருளெனக் கடைந்து எடுப்பதற்குத்தான்'

"மலைப் பகுதிகளில், காடுகளில் நிலத்துக்கு அடியில் உள்ள கனிம வளங்களை வெட்டி எடுப்பதென்றால் காலங்காலமாக இங்கு வாழும் ஆதிவாசிகளை வெளியேற்றுவதோடு, காடுகளையும் அழித்தாக வேண்டும். இந்தியாவில் மாபெரும் இயற்கை வளங்களை பெரும் முதலாளிகளும் அந்நியர்களும் கொள்ளையடிக்க விடுவதன் மூலம் நம் மக்களுக்கு என்ன எதிர்காலம் இருக்க முடியும்?'

"தமிழை அரசும் கல்வி நிறுவனங்களும் தொடர்ந்து புறக்கணித்துவரும் சூழலில் தமிழை, தமிழ் இலக்கியத்தை, தமிழ் வரலாற்றைக் காப்பாற்றி மேம்படுத்தும் முறையில் தமிழுக்குக் கிடைத்த செம்மொழித் தகுதியை நாம் எந்த அளவுக்குச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ளப் போகிறோம் என்பது இன்னும் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது'

இவ்வாறு இந்த நூல் முழுவதும் இன்றைய நாளின் பல்வேறு பிரச்னைகளைப் பற்றி - மக்களின் நலன் என்ற அடிப்படையில் - தனது கருத்துகளை தெளிவாகவும், துணிச்சலாகவும் முன் வைக்கிறார் நூலாசிரியர். சமூகத்தின் மீது அக்கறையுள்ள அனைவருக்கும் பயன்படும் நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடற்கரை புயல்... அபர்ணா தீக்‌ஷித்!

தலைவா... கூலி டிரைலரால் உற்சாகமடைந்த தனுஷ்!

பத்துக்கும் மேற்பட்ட யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மளிகை கடை வீடுகளை இடித்து அட்டகாசம்

ஆணவக்கொலைக்கு எதிராக தனிச் சட்டம் வருமா? முதல்வர்தான் சொல்லணும் என துரைமுருகன் பதில்

நடிகர் மதன் பாப் காலமானார்

SCROLL FOR NEXT