நூல் அரங்கம்

ஆ.மாதவன் மொழிபெயர்ப்புக் கதைகள்

ஆ.மாதவன் மொழிபெயர்ப்புக் கதைகள் - ஆ.மாதவன்; பக்.160; ரூ.110; வாலி பதிப்பகம், சென்னை-89; )044 - 4959 6311.

A. மாதவன்

ஆ.மாதவன் மொழிபெயர்ப்புக் கதைகள் - ஆ.மாதவன்; பக்.160; ரூ.110; வாலி பதிப்பகம், சென்னை-89; )044 - 4959 6311.
மலையாளம், வங்கமொழி, பிரெஞ்ச், ரஷ்யன், இத்தாலி ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட 17 சிறுகதைகளைத் தமிழில் சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறார் சாகித்திய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் ஆ.மாதவன். தகழி, மாதவிக்குட்டி, பொன்குன்னம் இல்லியாஸ், கெ.யூ.அப்துல்காதர், மாப்பசான், பால்ஸாக், மாக்சிம் கார்க்கி, பொக்காஷியோ, பிரபாத் குமார் முகர்ஜி ஆகிய புகழ்பெற்ற படைப்பாளிகளின் சிறு
கதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 1956 முதல் 1973 வரை திராவிடன், பகுத்தறிவு, போர்வாள், கண்ணதாசன் ஆகிய சிற்றிதழ்களில் இக்கதைகள் வெளியிடப்பட்டுள்ளன. 
தொகுப்பில் இடம் பெற்றுள்ள சிறுகதைகள் எழுதப்பட்ட காலம், பின்னணி, மொழி ஆகியவை வேறு வேறாக இருந்தாலும், ஆண் - பெண் உறவில் ஏற்படும் பல்வேறு சிக்கல்களே இக்கதைகளின் கருப்பொருள்களாகியுள்ளன. 
ஆண் - பெண் உறவு தொடர்பான கருப்பொருள்களுடன் மட்டுமல்லாமல், வாழ்வின் பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்தக் கூடிய வகையிலான சிறுகதைகளும் மொழிபெயர்க்கப்பட்டு இத் தொகுப்பில் சேர்க்கப்பட்டிருந்தால் கூடுதல் சிறப்பாக இருந்திருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT