நூல் அரங்கம்

கல்வியியல் கையேடு

ராமய்யா

கல்வியியல் கையேடு - ரூபியாஜோதி பாலச்சந்தர்; பக்.488; ரூ.330; விகடன் பிரசுரம்,சென்னை-2; )044 - 4263 4283.
முதலில் எல்லாம் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றுவிட்டு பி.எட் படித்தால் ஆசிரியர் வேலைக்குச் சேர்ந்துவிடலாம். முதுநிலைப் பட்டம் பெற்றுவிட்டு, எம்.பில் படித்தாலே கல்லூரியில் ஆசிரியராகப் பணி புரிய முடியும். ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது,
கல்வியியலில் பட்டப் படிப்புகள் படித்தாலும், பஉப, சஉப, நகஉப என்று போட்டித் தேர்வுகளை எழுதித் தேர்ச்சி பெற்றால்தான் ஆசிரியர் பணியில் சேர முடியும். கல்வியியல் படிப்பு படித்தவர்களுக்கு பதஆ, நஉதப போன்ற போட்டித் தேர்வுகளும் உள்ளன.
இந்தப் போட்டித் தேர்வுகளை எழுதுபவர்களுக்கு உதவியாகவும், கல்வியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு உதவியாகவும் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.
உளவியல்முறைகளை  -  ஃபிராய்ட், எரிக்சன், பியாஜே, அட்லர், கார்ல் யுங் ஆகியோரின் உளவியல் கொள்கைகளை இந்நூல் விளக்குகிறது. மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் கற்றல் கோட்பாடுகளைத் தெரிந்திருக்க வேண்டும். அவற்றைப் பற்றி இந்நூல் விரிவாக விளக்குகிறது. கற்கும் மாணவர்களின் நுண்ணறிவை அளவிட உதவும் கோட்பாடுகள், அவர்களின் ஆளுமையை அளவிடும் முறைகள், ஆக்கத் திறனும், பிரச்னைகளைத் தீர்க்கும் முறைகளும் என மாணவர் தொடர்பான உளவியல் மற்றும் சமூகவியல் பிரச்னைகளைத் தீர்க்கும் வழிமுறைகள் இந்நூலில் சொல்லப்பட்டுள்ளன.
ஆராய்ச்சி என்றால் என்ன? எவ்விதம் ஒரு பொருளை ஆராய்வது என்பதை விளக்கும் அடிப்படையான விஷயங்களும், கல்வியியல் தொடர்பானவற்றை ஆராயும் குறிப்பான விஷயங்களும் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. தேசியக் கல்விக் கொள்கை, கல்விக்குழுவின் அறிக்கைகள், கல்வி தொடர்பான மத்திய, மாநில அரசுளின் திட்டங்கள், கல்விசார்ந்த நிறுவனங்கள் பற்றிய அனைத்துத் தகவல்களும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

SCROLL FOR NEXT