நூல் அரங்கம்

மாடர்ன் தியேட்டர்ஸ்

ரா.வேங்கடசாமி

மாடர்ன் தியேட்டர்ஸ் - ரா.வேங்கடசாமி; பக்.160; ரூ.120; விஜயா பப்ளிகேஷன்ஸ், சென்னை-26; 044 - 2365 2007.
தமிழ்த் திரையுலகில் பல்வேறு சாதனைகளைப் படைத்த மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் தயாரித்த 118 திரைப்படங்கள் குறித்தும், அதன் நிறுவனர், இயக்குநர் டி.ஆர்.சுந்தரத்தின் வாழ்க்கை வரலாறு குறித்தும் அறிந்து கொள்ள உதவும் நூல். 
எம்.ஜி.ஆரின் நடிப்பில் உருவான "வீரவாள்' என்ற திரைப்படத்தின் பெயர் "சர்வாதிகாரி' என மாற்றப்பட்டது எப்படி? "மந்திரிகுமாரி', "அலிபாபாவும் 40 திருடர்களும்' படத்திற்குப் பிறகு எம்.ஜி.ஆர். மாடர்ன் தியேட்டர்ஸ் திரைப்படங்களில் நடிக்காதது ஏன்? என்பதற்கான காரணங்கள் இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளன. 
எம்.ஜி.ஆர்., வி.என்.ஜானகி, மு.கருணாநிதி, என்.டி.ராமாராவ் ஆகியோர் மாதச் சம்பளம் பெற்று பணிபுரிந்த நிறுவனம் என்பது மாடர்ன் தியேட்டர்ஸின் தனிப்பெருமை. மலையாளத்திலும், சிங்களத்திலும் முதல் திரைப்படத்தைத் தயாரித்த பெருமையும் மாடர்ன் தியேட்டர்ஸூக்கு உண்டு. 
1963 இல் "கொஞ்சும் குமரி' திரைப்படத்தில் நடிகை மனோரமாவை கதாநாயகியாக நடிக்க வைத்தவர் டி.ஆர்.சுந்தரம். இதே படத்தில்தான் கே.ஜே.யேசுதாஸ் முதல் பாடலைப் பாடியுள்ளார். இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள் நூல் முழுவதும் நிரம்பியுள்ளன. 1937 முதல் 1963 வரை 57 திரைப்படங்களை டி.ஆர்.சுந்தரம் தயாரித்து இயக்கியுள்ளார். 
டி.ஆர்.சுந்தரத்தின் குடும்ப நண்பரே இந்நூலை இயற்றியிருப்பதால் அனைத்து சம்பவங்களும் நேரில் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றன. மாடர்ன் தியேட்டர்ஸ் மூலம் வெளியான திரைப்படங்களின் காலவரிசையிலான பெயர்ப்பட்டியல், பல அரிய புகைப்படங்கள் என இந்நூல் ஒரு தகவல் களஞ்சியமாக மிளிர்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

அனுபமா பரமேஸ்வரனின் புதிய பட அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 104 நீதிபதிகள் இடமாற்றம்!

பகலறியான் படத்தின் டீசர்

SCROLL FOR NEXT