நூல் அரங்கம்

குமரி நாட்டில் சமணம்

DIN

குமரி நாட்டில் சமணம் - தோற்றம் வளர்ச்சி வீழ்ச்சி - சிவ.விவேகானந்தன்; பக்.615; ரூ.650; காவ்யா, சென்னை-24; 044 - 2372 6882.
 தமிழகத்தின் பழங்கால சமயங்களில் சமணமும் ஒன்று. சமண சமயத்தைச் சேர்ந்த அகத்திய முனிவர் பதினெண்குடி வேளிர், அருவாளர்களோடு தென்னகத்திற்கு வந்து, காடுகளை அழித்து நாடுகளாக்கி மக்களைக் குடியேற்றினார் என்பதும், வடக்கிலிருந்து பத்திரபாகு என்ற சமண முனிவர் மைசூர் நாட்டில் உள்ள சிரவணபௌகெளô குகையில் தங்கி, அவருடைய சீடரான விசாக முனிவரை சமண மதத்தைப் பரப்புவதற்காக தமிழகத்திற்கு அனுப்பி வைத்தார் என்பதும் சமண மதம் வடக்கிலிருந்து தமிழகத்துக்கு வந்தது என்பதையே சொல்கின்றன. இதற்கு மாறாக, உண்மையில் தமிழகத்தின் மிகப் பழமையான மதம் சமண மதம் என்கிறார் நூலாசிரியர்.
 சமண மதத்தின் தோற்றம், வளர்ச்சி, தமிழகத்தில் அதன் வீச்சு ஆகியவற்றை விளக்கும் நூலாசிரியர், குமரி மாவட்டத்தில் சமண சமயம் பெற்றிருந்த செல்வாக்கை பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் குறிப்பாக எடுத்துக் காட்டுகிறார்.
 சமண மதக் கோயில்களின் வழிபாட்டு நடைமுறைகள் சில, இன்றைய வழிபாடுகளிலும் இருப்பது, தமிழகத்தில் சமண சமயம் அழிந்து போனதற்கான காரணங்கள், தமிழ் இலக்கியத்தில் சமண சமயத்தின் தாக்கங்கள் என நிறைய செய்திகளை இந்நூல் சொல்கிறது. தமிழக மக்களின் இறை நம்பிக்கை, வழிபாட்டு முறைகள் எவ்வாறெல்லாம் மாறி வந்திருக்கின்றன என்பதை இந்நூல் மூலம் தெரிந்து கொள்ளலாம். அரிய முயற்சி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT