நூல் அரங்கம்

காவிரி ஒப்பந்தம் புதைந்த உண்மைகள்

சி.பி.சரவணன்

காவிரி ஒப்பந்தம் புதைந்த உண்மைகள் - சி.பி.சரவணன்; பக்.174; ரூ.170; வி கேன் புக்ஸ், 57, பிஎம்ஜி காம்ப்ளக்ஸ், தெற்கு உஸ்மான் ரோடு, தியாகராய நகர், சென்னை-17.
காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பான சிக்கல்கள் 200 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொடங்கிவிட்டன. மெட்ராஸ் மைசூர் மாகாண அரசுகளுக்கிடையில் கி.பி. 1892, 1924, 1929 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட ஒப்பந்தங்கள், மைசூர், தமிழ்நாடு, கேரளா மாநில அரசுகளுக்கிடையில் 1972 இல் ஏற்பட்ட ஒப்பந்தம் ஆகியவை பற்றி இந்நூல் விரிவாகக் கூறியிருக்கிறது. 1972 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் காவிரிப் படுகையின் மகசூல் மற்றும் நீர்ப் பயன்பாடு பற்றிய உண்மை விவரங்களைச் சேகரிப்பதற்காக ஒரு குழுவை அமைப்பதென்று முடிவெடுக்கப்பட்டது. அதன்படி அமைக்கப்பட்ட குழு 1973 இல் காவிரிப் படுகை பகுதியை ஆராய்ந்து அறிக்கையைச் சமர்ப்பித்தது, கர்நாடக அரசும் தமிழ்நாடு அரசும் நடத்திய பல்வேறு பேச்சுவார்த்தைகள், 1990 இல் நிறுவப்பட்ட காவிரி நடுவர் மன்றம் 2007 இல் வழங்கிய இறுதித் தீர்ப்பு, நடுவர் மன்றத் தீர்ப்புகளை கர்நாடகம் மதிக்காதது என காவிரி நதிநீர்ப் பிரச்னை தொடர்பான அனைத்து விவரங்களையும் இந்நூல் மூலம் தெரிந்து கொள்ளலாம். 
தண்ணீர் தகராறுகள் தொடர்பான சர்வதேச மற்ற இந்திய சட்ட வகையங்கள் பற்றிய விவரங்களும் இடம் பெற்றுள்ளன. 
காவிரி நதிநீர்ப் பிரச்னை தொடர்பான பல்வேறு தகவல்களைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு உதவும் நூல். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

தீபக் சஹாருக்கு காயமா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!

கத்தரிப்பூ சேலைக்காரி! மிருணாளினி ரவி...

ஆவேஷம் திரைப்படம் பார்த்து அழுதேன்: இயக்குநர் ஜியோ பேபி

ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு!

SCROLL FOR NEXT