நூல் அரங்கம்

நித்யத்தின் சாலையில் மூன்று இடைநிறுத்தங்கள்

வி. உமா


நித்யத்தின் சாலையில் மூன்று இடைநிறுத்தங்கள்- உமா பார்வதி; பக்.104; ரூ.120; யாவரும் பப்ளிஷர்ஸ், 214, புவனேஷ்வர் நகர்,  3-ஆவது பிரதான சாலை, வேளச்சேரி, சென்னை-42.
உறவுச் சிக்கல்களை கருவாகக் கொண்ட குறுநாவல். இளம் பெண் பத்திரிகையாளர் ஆராதனா தனது வாழ்க்கையைத் தானே சொல்வது போல் சென்னை, புதுச்சேரியை மையமாகக்கொண்டு நகர்கிறது கதை. உறவுவழியில் செய்த  முதல் திருமணம் தோல்வியில் முடிய, தன்னுடன் படித்தவனை காதல் மணம் செய்து கொள்கிறார் கதாநாயகி. முரண்களால் கட்டமைக்கப்பட்டவர்களாக இருந்தாலும், அன்பினால் மிக இறுக்கமாக அவர்கள் பிணைக்கப்படுகின்றனர். தொழில் நிமித்தமாக கேரளம் செல்கிறார் ஆராதனா. வேலை அவருக்குத் தந்த துணிவு கணவனைத் தோல்வியுற்றவனாக நினைக்கச் செய்துவிடுகிறது. இதையடுத்து இருவருக்கும் ஏற்பட்ட உரசல், கைகலப்பு வரை செல்கிறது. மகனைப் பார்க்க அவள் சென்னை சென்றிருந்த நேரத்தில், மகனை தூக்கிக் கொண்டு தலைமறைவாகிறான் கணவன்.

புதுவையில் தனி வீடு வாங்கி ஓவியக் கூடம் அமைத்து தானே சமைத்து சந்தோஷ வாழ்க்கை வாழ்கிறார் ஆராதனாவின் தந்தை. சந்தோஷப் பூக்களை தான் செல்லும் இடங்களில் எல்லாம் இரைத்துச் செல்லும் அவரது பாத்திரப் படைப்பு மறக்க முடியாதது. "எது போகிறதோ அது திரும்ப வரும்' என்ற அவரது வாசகமும் அப்படியே!

பிரான்ஸிலும் சென்னையிலுமாகப் பிரிந்த குடும்பம் மீண்டும் சேர்கிறதா, இல்லையா என்பதுதான் நாவலின் திருப்பம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தோனேசியாவில் ‘ஸ்டாா்லிங்க்’ இணையச் சேவை: எலான் மஸ்க் தொடங்கி வைத்தாா்

நேபாளம்: பிரசண்டா அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு

வெளிநாட்டில் மருத்துவம் பயின்றோருக்கு உள்ளுறை பயிற்சி: இரு ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி - 40 லட்சம் பிரசுரங்கள் வழங்க காங்கிரஸ் முடிவு

என்ஜினில் தீ: பெங்களூரில் விமானம் அவசர தரையிறக்கம்

SCROLL FOR NEXT