நூல் அரங்கம்

மேடையிலே வீசிய பூங்காற்று

DIN

மேடையிலே வீசிய பூங்காற்று - இரா.இராமமூர்த்தி; பக்.142; ரூ.140; வசந்தஸ்ரீ பதிப்பகம், 28- சி, கல்யாண் அடுக்ககம், இருப்புப்பாதை நிலையச் சாலை, ஆலந்தூர், சென்னை-16.
பட்டிமன்றம், வழக்காடு மன்றம், கோல உரையாடல், தனிச்சொற்பொழிவு என மேடைப் பேச்சில் திறமைவாய்ந்த நூலாசிரியர், அயல்நாடுகளிலும் நம் நாட்டிலும் பல மேடைகளை அலங்கரித்தவர். அவரைப் போன்ற மேடைப் பேச்சாளர்களுடன் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர். அப்படி அவர் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் நடந்த பல சுவையான நிகழ்ச்சிகளை மிகவும் சுவையாக இந்நூலில் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார். 
மேடைப்பேச்சில் முன்னணியில் இருந்த கி.வா.ஜகந்நாதன், ரசிகமணி டி.கே.சி., ரா.பி.சேதுப்பிள்ளை, கிருபானந்த வாரியார், குன்றக்குடி அடிகளார், பட்டிமன்றத்தில் சிறப்புற்ற விளங்கிய பேராசிரியர் பா.நமசிவாயம், ராதாகிருஷ்ணன், புலவர் சண்முக வடிவேல், சுகிசிவம் உள்ளிட்ட பலர் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் நடந்த பல சம்பவங்கள் நம் கண்முன் நிறுத்தப்படுகின்றன. 
ஓர் உடற்பயிற்சி கழகத்தின் ஆண்டு விழாவில் வாழ்த்திப் பேசச் சென்ற நூலாசிரியர், "கைத்தல நிறைகனி' எனத் தொடங்கும் திருப்புகழ் பாடலைப் பாடுகிறார். அந்த நிகழ்ச்சியில் கராத்தே பயிற்சி பெற்ற பல இளைஞர்கள் கூடியிருக்கின்றனர். இலக்கியம் பற்றி அதிகம் தெரியாத அவர்கள் நூலாசிரியரை கிண்டல் செய்யும்விதமாக நடனம் ஆடி கலாட்டா செய்கின்றனர். "விநாயகரே உலகில் முதன்முதலாக கராத்தே கலையைத் தொடங்கியவர்; பெரிய தேர் ஒன்றின் சக்கரத்தில் உள்ள அச்சினை ஒரேயடியில் பொடியாக்கியவர் விநாயகர் என்று பாடல் சொல்கிறது' என்று விளக்கியவுடன் கலாட்டா செய்தவர்கள் நூலாசிரியரின் முன் குனிந்து கராத்தே பாணியில் வணக்கம் செய்கிறார்கள். 
இது போன்ற ஏராளமான சுவையான நிகழ்ச்சிகளை நூலாசிரியர் நம்மிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT