நூல் அரங்கம்

கல்வியா? செல்வமா?

உதயை மு. வீரையன்

கல்வியா? செல்வமா? - உதயை மு.வீரையன்; பக்.160; ரூ.125; பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை-14;  044 - 2848  2441.
நம்நாட்டின் கல்விமுறை குறித்து தினமணி 
உள்பட பல்வேறு இதழ்களில் 1996 முதல் 2017 வரை வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு. 
"14  வயதுக்குட்பட்ட அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்வி என்று நம் அரசியல் சட்டம் கூறினாலும்  அவை இன்னும் எட்டப்படாத இலக்காகவே இருக்கிறது.' 
"பணம் இருந்தால்தான் படிக்கவே முடியும் என்ற நிலை உருவாகிவிட்டது.  படிப்பு என்பதே பணம் சம்பாதிப்பதற்கான  ஒரு தொழில் என்றே பெற்றோரும், மற்றோரும் எண்ணுகின்றனர். '
"இந்தியக் கல்வித்துறையில் வெளிநாட்டு நிறுவனங்களை அனுமதிக்கும் அரசின் முடிவு வெளிப்படையாகக் கூறப்படாமல் இரகசியமாகவே பாதுகாக்கப்பட்டு வருகிறது.  காட்ஸ் ஒப்பந்தம் மாணவரை வாங்குபவர் என்றும், ஆசிரியரை விற்பவர் என்றும், பல்கலைக்கழகங்களைக் கடைகள் என்றும் சொல்கிறது'
"தேசியக் கல்விக் கொள்கையில் கல்வியை பன்னாட்டுமயமாக்கும்  போக்கு வெளிப்படையாகத்  தெரிகிறது. இனிமேல் ஏழைகள் கல்வியை 
எண்ணிப் பார்க்க இயலாது என்ற நிலை உருவாகி வருகிறது. கல்வித்துறையில் சமத்துவம் இல்லாதபோது சமுதாயத்தில் சமத்துவம் காண்பது  கனவாகும்.'
"நீட் தேர்வுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதால் தனியார் பயிற்சி மையங்கள் வணிக நோக்கில்  பல்கிப் பெருகி பள்ளிக் கல்வியைப்பின்னுக்குத் தள்ளும் போக்கு உருவாகி வருகிறது'
இவ்வாறு, கல்விமுறை குறித்து விமர்சனரீதியான பார்வைகளை முன்வைக்கும் இந்த கட்டுரைகள்,  இன்றைய கல்விமுறையில் ஏற்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து வாசகர்களை ஆழமாகச்  சிந்திக்க வைக்கின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு: மதுரை மத்திய சிறைக் கைதிகள் 100 சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 2: சிஇஓஏ பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

ரஷியாவுக்கான ஜொ்மனி தூதா் திரும்ப அழைப்பு

ரூ,7.50 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை

தொரப்பள்ளியில் உலவிய காட்டு யானை

SCROLL FOR NEXT