நூல் அரங்கம்

பஞ்சதசி

DIN

பஞ்சதசி - மூலமும் உரையும்; பக்.280; ரூ.300; கோவிலூர் மடாலயம், சென்னை-33; )044- 2474 3081.
 உபநிடதங்களின் கருத்துகளை எளிமையாக்கி "வேதாந்த பிரகடனம்' என்கிற பெயரில் தொகுப்பு நூல் ஒன்று வடமொழியில் எழுதப்பட்டது. அதில் பதினைந்து பிரிவுகளில் ஆயிரத்து ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சுலோகங்கள் இடம் பெற்று உள்ளன.
 இதில் முதல் பிரிவில் இடம் பெற்றுள்ளவை பஞ்சதசி (பதினைந்து) ஆகும். இதனை இயற்றியவர் சிருங்கேரி மடத்தின் பன்னிரண்டாவது குருவாக விளங்கியஸ்ரீ வித்யாரண்ய சுவாமிகள் ஆவார். இந்நூலில் இடம் பெற்றுள்ள பதினைந்து அத்தியாயங்களில் அனைத்துவிதமான வேதாந்த கருத்துகளும் ஆழமாகவும் எளிமையாகவும் விளக்கப்பட்டுள்ளன.
 பொதுவாக வடமொழி நூலுக்கு தமிழில் எழுதப்படும் உரைகள் வடமொழி கலந்த மணிப்பிரவாள நடையிலேயே பெரும்பாலும் இருக்கும். இதனால் தமிழ் மட்டுமே அறிந்தவர்கள் அவற்றைப் படித்துப் பொருள் விளங்கிக் கொள்வது என்பது இயலாததாக இருந்தது. அதனை உணர்ந்து இந்நூல் முழுக்க முழுக்க எளிய தமிழிலேயே மூலமும் உரையும் அளிக்கப்பட்டுள்ளது.
 "பஞ்சபூத விவேகம்', "மகா வாக்கிய விவேகம்', "நாடக தீபம்', "வித்யானந்தம்', "அத்வைதானந்தம்' உள்ளிட்ட பதினைந்து தலைப்புகளில் உரைகள் அமைந்துள்ளன.
 மொழிபெயர்ப்பு என்று கூற முடியாதபடி சரளமான எளிய தமிழிலேயே மூலமும் உரையும் அமைந்திருப்பது சிறப்பு. இது ஓர் அரிய நூல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையால் மக்கள் அவதி

மரக்கடை உரிமையாளா் தற்கொலை

பெண் தற்கொலை: தம்பதியா் மீது வழக்கு

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT